போயஸ் கார்டனில் தனுஷின் புதுவீடு: பூமி பூஜையில் பங்கேற்ற ரஜினி!

0
245

போயஸ் கார்டனில் தனுஷின் புதுவீடு: பூமி பூஜையில் பங்கேற்ற ரஜினி!

சென்னை போயஸ் கார்டனில் தனுஷ் கட்டும் புதிய வீட்டின் பூமி பூஜையில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டார்.

‘கர்ணன்’ படத்தை முடித்துள்ள தனுஷ், அடுத்ததாக கார்த்திக் நரேன் இயக்கும் புதிய படத்தில் கலந்துகொண்டார். அந்தப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்ததாக அந்தப்படத்தின் கதாநாயகி மாளவிகா மோகனன் அவரது ட்விட்டர் பக்கத்தில் அப்டேட் செய்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து தனுஷ் அவெஞ்சர்ஸின் ஃபினிடி வார், எண்ட்கேம் உள்ளிட்டப் படங்களை இயக்கிய ரூஸோ சகோதரர்கள் இயக்கும் ‘தி க்ரே மேன்’ படப்பிடிப்பில் கலந்து கொள்ள நேற்று இரவு அமெரிக்கா செல்ல இருந்ததாகச் சொல்லப்பட்டது.

இந்நிலையில் அவர் இன்று போயஸ்கார்டனில் தான் கட்டும் புதிய வீட்டுக்கான பூமி பூஜையில் ஈடுபட்டுள்ளார். அந்த பூஜையில் நடிகர் ரஜினிகாந்த், தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ், லதா ரஜினிகாந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இன்று இரவு தனுஷ் அமெரிக்கா செல்ல இருப்பதாக சொல்லப்படுகிறது.