பேய் மாமா விமர்சனம்

0
260

பேய் மாமா விமர்சனம்

பாக்யா சினிமாஸ் சார்பில் விக்னேஷ் ஏலப்பன் தயாரித்திருக்கும் பேய் மாமா படத்தின் கதை,திரைக்கதையை  எழுதி இயக்கியிருக்கிறார் ஷக்தி சிதம்பரம்.
யோகிபாபு, மாளவிகா மேனன், செந்தி , மீனாள், ராகுல் தாத்தா, ரமேஷ் கண்ணா, லொள்ளுசபா மனோகர், வையாபுரி, சுஹாசினி , அபிஷேக், பொன்குமரன், காவியா சுரேஷ், எம்.எஸ்.பாஸ்கர், இமான் அண்ணாச்சி , மொட்டை ராஜேந்திரன், ரேகா, ரேஷ்மா,கோவை சரளா, சாம்ஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்கள் : ஒளிப்பதிவு – எம்.வி.பன்னீர்செல்வம், இசை – ராஜ் ஆர்யன்,கலை – ஆர்.ஜனார்த்தனன், எடிட்டிங்  – பிரீத்தம், வசனம்  – சாய் ராஜகோபால், ஸ்டண்ட்- தளபதி தினேஷ், பிரதீப் தினேஷ், நடனம் – நோபல், பாடல்கள்  –  ஷக்தி சிதம்பரம், ஏக்நாத், தயாரிப்பு மேற்பார்வை  –  ஷங்கர்.ஜி, மக்கள் தொடர்பு  – மௌனம் ரவி , மணவை புவன்.
பல ஏக்கர் மதிப்புள்ள பங்களாவை குறைந்த விலையில் வாங்க நினைக்கும் ஒரு கும்பல் அதை வாங்க வருபவர்களை பேய் இருக்கும் பங்களா என்று ஜோடித்து விரட்டி அடிக்கின்றனர்.உண்மையாகவே எம்.எஸ்.பாஸ்கர், ரேகா, மொட்ட ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி ஆகிய பேய்கள் அங்கே இருக்க, அது தெரியாமல் பேய் இல்லை என்பதை நிரூபித்து காட்ட யோகி பாபு உள்ளிட்ட இரு குடும்பங்கள் அந்த பங்களாவில் தங்குகின்றனர். எம்.எஸ்.பாஸ்கரின் பேய் குடும்பம் யோகிபாபுவிடம் தஞ்சமடைந்து வில்லன் கும்பலை பழி வாங்க சொல்கிறது. யோகிபாபு பேய்களுக்கு உதவி செய்தாரா? வில்லன்களை விரட்டினாரா? என்பதே மீதிக்கதை.
ஒரே பாணியில் வசனம் பேசி கலாய்க்கும் யோகிபாபு, மாளவிகா மேனன், செந்தி , மீனாள், ராகுல் தாத்தா, ரமேஷ் கண்ணா, லொள்ளுசபா மனோகர், வையாபுரி, சுஹாசினி , அபிஷேக், பொன்குமரன், காவியா சுரேஷ், எம்.எஸ்.பாஸ்கர், இமான் அண்ணாச்சி , மொட்டை ராஜேந்திரன், ரேகா, ரேஷ்மா,கோவை சரளா, சாம்ஸ் என்று ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளங்கள் படத்தில் வந்து போகின்றன, சிரிக்க வைக்க முயல்கின்றன.
ஒளிப்பதிவு – எம்.வி.பன்னீர்செல்வம், இசை – ராஜ் ஆர்யன் ஆகியோர் கற்பனை திறனுடன் சிறப்பாக கொடுக்க முயற்சி செய்கின்றனர்.
பிரீத்தம் படத்தொகுப்பும், ஆர்.ஜனார்த்தனன் கலையும் பரவாயில்லை.
ஒரு பாரம்பர்ய மூலிகை குடும்பம் வில்லன்களால் கொல்லப்பட, பேயாக திரியும் அந்த குடும்பம் வில்லன்களை ஆள் வைத்து பழி தீர்ப்பதே படத்தின் கதை. இதில் ஏகப்பட்ட படங்களை கிண்டலடித்தும், விளம்பரம், யூ டியூப் பிரபலங்களை நகைச்சுவை என்ற பெயரில் கலாய்த்தும் படத்தை கொடுத்து சிரிப்பை வரவழைக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர் ஷக்தி சிதம்பரம். பழைய ஸ்டைலை காப்பியடித்து புதிய பக்குவத்தோடு கொடுத்து அதில் பேய் பயமுறுத்தல் கலந்து  கொடுத்திருந்தாலும் சிரிப்பு மருந்தளவுவிற்கு கூட இல்லை என்பதே நிதர்சனம்.
மொத்தத்தில் பாக்யா சினிமாஸ் சார்பில் விக்னேஷ் ஏலப்பன் தயாரித்திருக்கும் பேய் மாமா எதிர்பார்த்த காமெடி இல்லாத பேய் படம்.