பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே திரை விமர்சனம்: சொல்ல வந்த கருத்தை அழுத்தமாக சொன்னால் மட்டுமே விழிப்புணர்வு ஏற்படும்

0
167

பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே திரை விமர்சனம்: சொல்ல வந்த கருத்தை அழுத்தமாக சொன்னால் மட்டுமே விழிப்புணர்வு ஏற்படும்

ரெயின்போ புரொடக்சன்ஸ் சார்பில் வரதராஜ் தயாரித்து இயக்கியிருக்கும் படம் பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே.
இ;தில்  நடிகர் ராஜ்கமல், ஸ்வேதா பண்டிட், மது, ஜெயச்சந்திரன் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
தொழில்நுட்ப கலைஞர்;கள்:- இசை-விவேக் சக்கரவர்த்தி, ஒளிப்பதிவு – சதீஷ் குமார், பிஆர்ஒ-சக்தி சரவணன்.

ராஜ்கமல் காதலிப்பது போல் தனியாக வசிக்கும் பெண்களையும், முகநூல் மூலம் பழகும் பெண்களையும் மயக்கி, ஆபாசமாக படம் பிடித்து. மிரட்டி பணம் பறிப்பதில் கில்லாடி. இவரின் வலையில் விழ்ந்த பெண்கள் வெளியுலகிற்கு பயந்தும் பணத்தைக் கொடுத்தும் சமாளிக்க முடியாமல் திணறுகிறார்கள். சிலர் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கும் சென்று விடுகின்றனர். சில பெண்களின் இறப்புகள் போலீஸிற்கு கேள்விக்குறியாகவும் மர்மமாகவும் இருக்க, போலீஸ் அதிகாரி மது காரணமானவர்களை தேடுகின்றார். இதனிடைய போலீஸ் அதிகாரி மதுவின் இரண்டு உடன் பிறவா தங்கையாக இருப்பவரில் ஒருவர் இறக்க, அதிர்ச்சியாகும் போலீஸ் அதிகாரி மது நிலைமை மோசமாவதை அறிந்து தீவிரமாக துப்பு துலக்க களமிறங்குகிறார். இன்னொரு தங்கையாக பாவிக்கும் ஸ்வேதா பண்டிட் ராஜ் கமலை தீவிரமாக காதலிக்கிறார். இருவரும் கோடைக்கானலுக்கு இன்பச் சுற்றுலா செல்ல, தனிமையை எதிர்பார்த்து காத்திருக்கும் ராஜ் கமல் என்ன செய்தார்? ஸ்வேதா பண்டிட் இவரிடமிருந்து தப்பித்தாரா? போலீஸ் ராஜ்கமலை பிடித்ததா? என்பதே மீதிக்கதை.

ராஜ்கமல் எந்த கதாபாத்திரத்திலும் சிறப்பாக நடிக்கக்கூடியவர் என்பதால் அரவிந்த் என்ற நெகடிவ் கதாபாத்திரத்திலும் தன்னுடைய பங்களிப்பை சிறப்பாக கொடுத்துள்ளார். காதலியை ஏமாற்ற நினைக்கும் நேரத்தில் தானே ஏமாந்து காதலில் விழும் தருணத்திலும், காதலியிடம் இறுதிக் காட்சியில் கெஞ்சி மன்னித்து ஏற்க வேண்டும் என்று கதறும் போதும் மனதில் நிற்கிறார். பாடல் காட்சிகளிலும், காதல் காட்சிகளிலும் முடிந்தவரை இயல்பாக வந்து போகிறார்.

நந்தினியாக ஸ்வேதா பண்டிட் படம் ஆரம்பம் முதல் இறுதி வரை முக்கிய கதாபாத்திரம் ஏற்று காதல், செண்டிமெண்ட், அதிர்ச்சி, வெறுப்பு என்று உணர்வுபூர்வமாகவும் யதார்த்தமாகவும் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
போலீஸ் அதிகாரியாக மது, ஜெயச்சந்திரன், ஆப்ரிக்க நாட்டவர் மற்றும் பலர் படத்திற்கு பலம்.

சதீஷ்குமாரின் ஒளிப்பதிவையும் விவேக் சக்ரவர்த்தியின் இசையையும் கூடுதல் சிறப்பு.

ஆபாச வீடியோக்கள் விற்கும் கடையில் அந்த விடியோக்களின் விலை வெறும் ரூ.999ல் உள்ளேயே பரவலாக கிடைக்கும்  அதை வாங்குபவர்களுக்கு மட்டுமே தெரியும் என்பதால் இந்தப் பெயர் காரணம், மற்றும் பெண் என்பதை பென் என்று மாற்றியிருப்பது தணிக்கைக்காகவும், சர்ச்சை ஏற்படாமல் இருக்க மட்டுமே என்பது தான் இயக்குனர் வரதராஜின் உள்நோக்கம். பெண்கள் காதலிக்கப்படுவதும், ஏமாற்றப்படுவதும், மிரட்டப்படுவதும், தற்கொலைக்கு தூண்டப்படுவதையும் தான் பிரதானமாக திரைக்கதையில் காட்டியிருக்கிறார். இதற்கு காரணம் பொது இடங்களில் இணையதள சேவையை இலவசமாக கிடைக்க பயன்படுத்தும் கடவுச்சொல்லால், அதை பயன்படுத்தும் பெண்கள் எத்தகைய இன்னல்களுக்கு தள்ளப்படுகிறார்கள் என்பதையும், தொழில்நுட்ப வளர்ச்சியால் பலவித செயலிகளை செல்போனில் பயன்படுத்துவதும் ஒரு காரணம் என்று கூறினாலும், இதற்கான தீர்வை அழுத்தமாக சொல்லாமல் மேலோட்டமாக சொல்லி, காதலை மட்டுமே பிரதானமாக சொல்லியிருப்பதில் சொல்ல வேண்டிய கருத்து எடுபடாமல் போவது தான் படத்தின் மைனஸ். மற்றபடி கதைக்கேற்ற சம்பவங்கள், கொடைக்கானல் காட்சிகள், பாடல்கள் என்று ரிச்சாக கொடுக்க முயற்சி செய்து வெற்றியும் பெற்றிருக்கிறார் இயக்குனர் வரதராஜ். படத்திற்காக எடுத்திருக்கும் முயற்சிக்கும், உழைப்பிற்கும் வாழ்த்துக்கள்.

மொத்தத்தில் பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே சொல்ல வந்த கருத்தை அழுத்தமாக சொன்னால் மட்டுமே விழிப்புணர்வு ஏற்படும்.