பூஜையுடன் தொடங்கிய ஹன்சிகாவின் ‘ரெளடி பேபி’

0
105

பூஜையுடன் தொடங்கிய ஹன்சிகாவின் ‘ரெளடி பேபி’

ஹன்சிகாவின் 50வது படமாக வெளிவர இருக்கும் மஹா திரைப்படம் மற்றும் உலக சாதனை முயற்சியாக ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டிருக்கும் 105 மினிட்ஸ் ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளிவர உள்ளன.

இந்த நிலையில், ஹன்சிகா ‘ரெளடி பேபி’ என்ற புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இப்படத்தை அபிஷேக் ஃபிலிம்ஸ் ரமேஷ் பி பிள்ளை தயாரிக்கிறார். அறிமுக இயக்குநர் ராஜா சரவணன் இயக்குகிறார்.

சாம் சி எஸ் இசையமைக்க வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார். ஹன்சிகா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க அவருடன், சத்தியராஜ், மீனா, ராம்கி, சோனியா அகர்வால், லக்‌ஷ்மி ராய், ஜான் கொக்கன் உள்ளிட்டப் பலரும் நடிக்கிறார்கள்.

செல்லதுரை ஒளிப்பதிவு செய்ய உள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்க உள்ளார். ‘கவிப்பேரரசு’ வைரமுத்து பாடல்களை எழுதுகிறார். தீபக் துவாரகநாத் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். இப்படத்தை அபிஷேக் பிலிம்ஸ் சார்பில் ரமேஷ் பி.பிள்ளை தயாரிக்கிறார்.

இப்படத்தின், படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கியது. பூஜையில் ஹன்சிகா, வைரமுத்து உள்ளிட்டப் பலரும் கலந்துகொண்டனர்.