பூஜையுடன் திரில்லர் படத்தை தொடங்கிய ‘திரிஷ்யம்’ கூட்டணி

0
162

பூஜையுடன் திரில்லர் படத்தை தொடங்கிய ‘திரிஷ்யம்’ கூட்டணி

மோகன்லால் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கிய ’த்ரிஷ்யம்’, ‘த்ரிஷ்யம் 2’ மாபெரும் வெற்றிப் பெற்றதால், மூன்றாவது முறையாக இந்த வெற்றிக்கூட்டணி ‘12த் மேன்’ படத்தில் இணைந்துள்ளனர்.

கடந்த மாதம் இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியான நிலையில், பிரித்விராஜின் ‘ப்ரோ டேடி’ படத்தில் ஹைதராபாத் படப்பிடிப்பில் கலந்துகொண்டார் மோகன்லால். அப்படத்தின், படப்பிடிப்பு தற்போது முடியும் தருவாயில் இருப்பதால், இன்று ‘12த் மேன்’ படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது.

பூஜையில், ஜீத்து ஜோசப், இப்படத்தின் தயாரிப்பாளர் உள்ளிட்டப் படக்குழுவினர் கலந்துகொண்டனர். ’த்ரிஷ்யம்’, ‘த்ரிஷ்யம் 2’ போன்றே ‘12த் மேன்’ படமும் த்ரில்லர் கதைக்களத்தைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.