புதிய தோற்றத்தில்,  மிரட்டும் லுக்கில், நடிகர் கணேஷ் வெங்கட் ராம்!

0
146

புதிய தோற்றத்தில்,  மிரட்டும் லுக்கில், நடிகர் கணேஷ் வெங்கட் ராம்!

அபியும் நானும் திரைப்படம் மூலம் தமிழ் திரையில் அறிமுகமான நடிகர் கணேஷ் வெங்கட்ராம், கமலுடன் இணைந்து உன்னைப்போல் ஒருவன் படத்திலும், பின்பு பிக்பாஸில் கலந்து கொண்டது மூலமும் தமிழக மக்களின் நெஞ்சங்களை கொள்ளை கொண்டு, நம் வீட்டு பிள்ளை என்ற பெயர் பெற்றவர். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு  பிறகு  பல வாய்ப்புகள் குவிந்தாலும் தனது  கதாப்பத்திரங்களை மிகவும் கவனமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மராட்டி பெங்காலி மொழிகளில் உருவாகும் “உன் பார்வையில்” திரைப்படத்தில்  நாயகனாக நடித்து வருகிறார்.

தற்போது அனைத்துவிதமான பாத்திரங்களுக்கும் ஏற்றவாறு, தன்னை மாற்றிக்கொள்ளும் பொருட்டு, எப்போதும் உலா வரும் நேர்த்தியான,  மாடர்ன் லுக்கிலிருந்து கரடுமுரடான கிராமத்து இளைஞன் லுக்கிற்கு மாறியுள்ளார். புது லுக்கில் அவர் எடுத்துக்கொண்டிருக்கும் ஃபோட்டோஷீட் புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

நடிகர் கணேஷ் வெங்கட் ராம் என்றதுமே  நம் மனதிற்கு,  அழகான தோற்றத்தில் நேர்த்தியான வடிவில்,  மாடர்ன் ஆடையில் பளிச் லுக்கில்,  அவரது கச்சிதமான தோற்றம் தான் ஞாபகத்துக்கு வரும். ஆனால் எப்போதும்  வழவழப்பான  கன்னத்துடன் ஸ்வீட் & நீட் ஆக  இருக்கும்  தன் கச்சிதமான தோற்றத்தை துறந்து, முழுக்க வளர்த்த தாடியில்,  கிராமத்து இளைஞன் போன்று புதுமையான தோற்றத்திற்கு மாறி அசத்தியுள்ளார் கணேஷ்  வெங்கட்ராம்.

இது குறித்து நடிகர் கணேஷ் வெங்கட்ராம் கூறியதாவது..
இந்த கொரோனா லாக்டவுன் மொத்த சினிமா துறையையும் புதிதாக மாற்றிவிட்டது. சினிமா தன்னையே புதுப்பித்து கொண்டிருக்கிறது. 10 வருடங்களை கடந்து சினிமாவில் பயணிக்கும் நானும், என்னை புதுப்பித்துக் கொள்ள நினைத்தேன். சினிமாவில் என்னுடன் பயணிக்கும் நண்பர்களுடன் ஆலோசித்தேன். தமிழ் நாட்டிற்கு எது சிறப்பு என்று யோசித்தபோது, கிராமம் தான் தமிழ்நாட்டின் ஆத்மா எனபது புரிந்தது. அதனால் கிராமத்து லுக்கிற்கு மாற முடிவு செய்து தாடி வளர்தேன். முழுக்க என்னை கிராமத்தானாக மாற்றிக்கொண்டு, இந்த போட்டோஷூட்டை செய்தோம். இந்த புதிய லுக்,  தமிழ் திரைப்படைப்பாளிகள் என்னை வித்தியாசமான கதாப்பாத்திரங்களில் யோசித்து பார்க்க பேருதவியாக இருக்கும். பொதுவாகவே நடிகர்கள் தன்னை புதிது புதிதாக மாற்றிக்கொள்வது மிக முக்கியம். நம்மை அனைவரும் ஒரே மாதிரி  பார்க்கும் நேரத்தில்,  வித்தியாசமான தோற்றம் ஒரு புத்துணர்ச்சியையும், புதிய வாய்ப்புகளையும் தரும் என்றார்.

நடிகர் கணேஷ் வெங்கட்ராம் அடுத்ததாக இரண்டு பெரிய இணைய தொடர்களில் நடிக்க உள்ளார் இரண்டிலுமே இந்த புதிய தோற்றத்தில் தான் நடிக்கவுள்ளார்.

முழுக்க முழுக்க, முற்றிலும் மாறுபட்ட இந்த கரடு முரடான அவரது  தோற்றத்தை Sketzhes நிறுவனம் தான் உருவாக்கியுள்ளது. கணேஷ் வெங்கட்ராமை முழுக்க மாறுப்பட்ட தோற்றத்திற்கு மாற்றி, ஃபோட்டோஷூட் நடத்தியுள்ளது இந்நிறுவனம். கிராமத்து லுக்கில் மட்டுமில்லாமல், கரடு முரடான மாடர்ன் இளைஞன் தோற்றத்திலும் ஃபோட்ஷீட் செய்துள்ளது. நுங்கம்பாக்கம் 24 “The Spirit” ல் நடைபெற்ற இந்த  ஃபோட்டோஷூட்டில் உடை வடிவமைப்பை,  தீப்தி செய்துள்ளார். சிகை அலங்காரத்தை சரவணன் செய்துள்ளார்.  மேக்கப் YOLO Saloon செய்ய ஜோஹன் சத்யதாஸ் புகைப்பட கலைஞராக பணியாற்றியுள்ளார்.