புதிய சாதனை படைத்த மாநாடு டிரெய்லர்!
சிம்பு ரசிகர்கள் கொண்டாட்டம்!!
சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இப்படத்தை சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷனும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளனர். ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
மாநாடு படத்தின் டிரெய்லர் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இந்த டிரெய்லர், தற்போது புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. அதன்படி இப்படத்தின் டிரெய்லர் யூடியூபில் 1 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்று உள்ளது. சிம்பு நடித்த படத்தின் டிரெய்லர் ஒன்று 1 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெறுவது இதுவே முதன்முறை. இதனை சிம்பு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.