பிளான் பண்ணி பண்ணனும் திரை விமர்சனம்: அடாத மழையிலும் ரசிகர்களை விடாமல் துரத்தி சிரிக்க வைக்க முயற்சி செய்துள்ளது

0
238

பிளான் பண்ணி பண்ணனும் திரை விமர்சனம்: அடாத மழையிலும் ரசிகர்களை விடாமல் துரத்தி சிரிக்க வைக்க முயற்சி செய்துள்ளது

பாசிடிவ் பிரிண்ட் ஸ்டுடியோஸ் சார்பில் ராஜேஷ் குமார் மற்றும் எல்.சிந்தன் இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் பிளான் பண்ணி பண்ணனும்.
இப்படத்தில் பிக்பாஸ் பிரபலம் ரியோ, ரம்யா நம்பீசன், பால சரவணன், ரோபோ ஷங்கர், தங்கதுரை, பூர்ணிமா ரவி, சித்தார்த் விபின், ஆடுகளம் நரேன்,  ரேகா, விஜி சந்திரசேகர், சந்தானபாரதி, மாரிமுத்து ஆகியோர் நடித்து பத்ரி வெங்கடேஷ் இயக்கி உள்ளார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:-இசை-யுவன் ஷங்கர் ராஜா, பாடல்கள்-நிரஞ்சனா பாரதி, கலை-பிபிஎஸ்.சரவணன், படத்தொகுப்பு-சாம் ஆர்.டிஎக்ஸ், ஒளிப்பதிவு-பி.ராஜசேகர், மக்கள் தொடர்பு- சுரேஷ்சந்திரா.

தனியார் ஐடி ஊழியர்களும் நண்பர்களுமான நாயகன் ரியோ மற்றும் பால சரவணன், இருவரும் பணிபுரியும் நிறுவனத்தில் நடைபெற இருக்கும் நிகழ்ச்சிக்கு, நடிகை ஒருவரை அழைத்து வந்து நடனமாட வைப்பதாக கூறி ஒரு தொகையை பெற்றுக்கொள்ள, அந்தப்பணம் வீட்டில் இருந்து காணாமல் போகிறது. அந்தப்பணத்துடன் பால சரவணனின் தங்கையும் தொலைந்து விடுகிறார். வேலை செய்யும் நிறுவனத்தில் இருந்து பணத்தை திரும்பி கேட்க, ரியோவும், பால சரவணனும், தொலைந்த பணத்தையும் தங்கையையும் தேட ஆரம்பிக்கிறார்கள். தன் தங்கைக்கு உதவி திருமணம் செய்து கொள்ள அனுப்பிய ரம்யா நம்பீசனை வைத்து, தங்கையை அவரின் ஊரில் கண்டுபிடிக்கிறார்கள். போன இடத்தில் பூர்ணிமா ரவி திருமணம் நடந்ததா, இல்லையா? ரியோ, பாலசரவணனை ரம்யா நம்பீசன் தடுத்தாரா, இல்லையா? காணாமல் போன பணம் என்னவானது? என்பதே படத்தின் மீதி கதை.

பிக்பாஸ் பிரபலம் ரியோ அமைதியாகவும், அசத்தலாகவும் பங்களிப்பை கொடுத்து சிறப்பிக்கிறார். அழகிலும், நடிப்பிலும் அசத்தும் ரம்யா நம்பீசன்.

தங்கைக்காக பரிதவிக்கும் அண்ணன் பால சரவணன், சிரிப்பே வராத காமெடியில் ரோபோ ஷங்கர், டிக்டாக் வீடியோ அனுப்பி நடிக்க சான்ஸ் தேடும் திலகமாக தங்கதுரை, அடக்கமாக வந்து அசால்டாக ஒரு பக்க வசனத்தை மூச்சு விடாமல் பேசி அசத்தும் தங்கை பூர்ணிமா ரவி, சித்தார்த் விபின், ஆடுகளம் நரேன்,  ரேகா, விஜி சந்திரசேகர், சந்தானபாரதி, மாரிமுத்து ஆகியோர் படத்தின் ஒட்டத்திற்கு பக்க தூண்களாக இருந்து உதவி செய்கின்றனர்.

நிரஞ்சனா பாரதியில் பாடல்களில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடல்களை அனைத்தும் கேட்கும் ரகம்.

பி.ராஜசேகரின் ஒளிப்பதிவு பயணம் சம்பந்தப்பட்ட தேடுதல் வேட்டையில் சிறப்பாக காட்சிக்கோணங்களையும், சண்டைக்காட்சிகளையும் கொடுத்துள்ளார்.

கலை-பிபிஎஸ்.சரவணன், படத்தொகுப்பு-சாம் ஆர்.டிஎக்ஸ் கச்சிதம்.

பணத்தையும், தங்கையையும் தேடும் பயணத்தில் வெற்றி கிடைத்ததா? என்பதே படத்தின் திரைக்கதை. இதை முதல் பாதி நட்பு, காமெடி கலந்து கொடுத்து, இரண்டாம் பாதி துரத்தல், செண்டிமெண்ட் கலந்து படம் முழுவதும் லாஜிக்கில்லா காமெடியாக மேஜிக் செய்ய நினைத்திருக்கிறார் இயக்குனர் பத்ரி வெங்கடேஷ்.

மொத்தத்தில் பாசிடிவ் பிரிண்ட் ஸ்டுடியோஸ் சார்பில் ராஜேஷ் குமார் மற்றும் எல்.சிந்தன் இருவரும் இணைந்து தயாரித்துள்ள பிளான் பண்ணி பண்ணனும் அடாத மழையிலும் ரசிகர்களை விடாமல் துரத்தி சிரிக்க வைக்க முயற்சி செய்துள்ளனர்.