பிரின்ஸ் ஸ்டூடியோஸ் A. பிரின்ஸ் ஜோசப் தயாரிக்கும் அமானுஷ்ய படம் ‘ஓஜோ’
தொழில்நுட்ப கலைஞர்கள்
தயாரிப்பு நிறுவனம் : பிரின்ஸ் ஸ்டூடியோ
தலைப்பு : ஓஜோ
இயக்குனர் : ரவி தேவா
தயாரிப்பு : A. பிரின்ஸ் ஜோசப்
இணை தயாரிப்பு : நஞ்சுண்டான் பிச்சாண்டி
பாடல்கள் : கவிஞர் சினேகன்
கேமரா : பால பரணி
இசை : சந்தோஷ் சந்திர போஸ்
நடனம் : ராதிகா, ஸ்ரீ செல்வி
சண்டை : ஜாக் ஜான்சன்
மக்கள் தொடர்பு : கிளாமர் சத்யா
ப்ரியாவும் சிவாவும் ஒரு VFX கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்கள். காதலித்து கல்யாணம் பண்ணிய ப்ரியாவின் அம்மாவும் அப்பாவும் விவாகரத்து பண்ணி பிரிந்து தனித்தனியாக வாழ்வதால் ப்ரியாவிற்கு காதல் மேல் நம்பிக்கை இல்லாமல் போகிறது.
இந்த சூழலில் தொடர்ந்து ப்ரியாவை சிவா விரட்டி விரட்டி காதல் வயப்பட வைக்கிறான். இருவரும் LIVING TOGETHER முறையில் வாழ ஆரம்பிக்கிறார்கள்.
அப்போது ஒரு ஒன்பது வயது சிறுமி அமானுஷ்யமாக வந்து ப்ரியாவை பல விதங்களில் துன்புறுத்தி கொலை செய்ய முயற்சிக்கிறாள். சிவாவின் நண்பரான பிரபாகர் யார் இந்த சிறுமி அவள் ஏன் ப்ரியாவை விரட்டுகிறாள் என்பதை ஓஜோ போர்டு மூலம் தெரிந்து கொள்கிறார். உண்மையான காரணம் தெரிந்த சிவாவும் ப்ரியாவும் அதிர்ச்சியடைகிறார்கள். அவர்கள் வாழ்வில் இடையூறாக இருக்கும் அந்த அமானுஷ்ய சக்தியை பிரபாகர் எப்படி விரட்டுகிறார் என்பதை புதுமையான விதத்தில் இந்த கதையில் சொல்லப்பட்டு பார்ப்பவர்களை நிச்சயமாக கவரும்.