பிரபாஸ் – பூஜா ஹெக்டேவின் ‘ராதே ஷ்யாம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

0
73

பிரபாஸ் – பூஜா ஹெக்டேவின் ‘ராதே ஷ்யாம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

யு வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகியுள்ள ‘ராதே ஷியாம்’ மார்ச் 11 அன்று வெளியாகிறது

யு வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகியுள்ள ‘ராதே ஷியாம்’ திரைப்படம் மார்ச் 11 அன்று பல்வேறு மொழிகளில் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாகிறது.

‘ராதே ஷியாம்’ படத்தில் விக்ரம் ஆதித்யா என்ற கைரேகை நிபுணராக பிரபாஸ் நடித்துள்ளார். பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு முழு நீள காதல் கதையில் பிரபாஸ் நடிப்பதால் ரசிகர்கள் மட்டற்ற மகிழ்ச்சியில் உள்ளனர்.
இப்படத்தின் டிரைலர், பாடல்கள் மற்றும் போஸ்டர்கள் பெரும் வரவேற்பை பெற்றிருக்கின்றன.

ராதே ஷியாம் திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். இப்படத்தில் பாக்கிய ஸ்ரீ, சச்சின் ஹெடெக்கர், குணால் ராய் கபூர், ஜெகபதி பாபு, ப்ரியதர்ஷி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் கையாண்டுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் ஒரே சமயத்தில் ‘ராதே ஷியாம்’ வெளியாகவுள்ளது.

ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில், யு வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகியுள்ள ‘ராதே ஷியாம்’ திரைப்படம் மார்ச் 11 அன்று வெளியாக உள்ளது.