பிரபல நடிகர் அனில் முரளி உயிரிழப்பு

0
244

பிரபல நடிகர் அனில் முரளி உயிரிழப்பு

தமிழில் நிமிர்ந்து நில், கொடி, தனி ஒருவன் உள்ளிட்ட பலப் படங்களில் நடித்தவர் மலையாள நடிகர் அனில் முரளி. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிறந்த இவர் மலையாளம், கன்னடம் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் வெளிவந்த 200க்கும் மேற்பட்ட  படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் பணியாற்றி இருக்கிறார்.

இந்நிலையில் கல்லீரல் பிரச்னை தொடர்பாக கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த இவர் சிகிச்சைப்பலனன்றி உயிரிழந்துள்ளார். இவருக்கு வயது 56. இவரது இறப்புச் செய்தியைக் கேட்ட மலையாள திரையுலகினர் பலர் தங்களது ஆழ்ந்த இரங்கல்களை சமூக வலைதளங்கள் வாயிலாக தெரிவித்து வருகின்றனர்.