பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகி மீது இளையராஜா போலீசில் புகார்

0
312

பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகி மீது இளையராஜா போலீசில் புகார்

இசையமைப்பாளர் இளையராஜா வடபழனியில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் தனது பாடல்களைப் பதிவு செய்து வந்தார். 40 ஆண்டுகளுக்கு முன்னர் எல்.வி.பிரசாத் இளையராஜாவுக்கு அங்கு இடம் வழங்கினார், மேலும் இளையராஜா இந்த ஸ்டுடியோவிலிருந்து மிகப் பெரிய ஹிட் பாடல்களைப் பதிவு செய்திருந்தார்.

எல்.வி.பிரசாத்தின் மகன் ரமேஷ் பிரசாத்தும், பிரசாத் ஸ்டுடியோவில் இளையராஜா ரெக்கார்டிங் ஸ்டுடியோ வைத்திருப்பதில் பெருமிதம் கொண்டார். ஆனால் கடந்த ஆண்டு எல்.வி.பிரசாத்தின் பேரன் சாய் பிரசாத், இளையராஜாவை ஸ்டுடியோவை விட்டு வெளியேற வேண்டும் என்று விரும்பினார். அப்போது, இளையராஜாவுக்கு ஆதரவாக கோலிவுட்டும் திரண்டு வந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் பலன்கிடைக்கவில்லை. இளையராஜாவும் இனிமேல் பிரசாத் ஸ்டுடியோவில் இருக்க வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டார்.

தற்போது இளையராஜா கோடம்பாக்கத்தில் எம்.எம்.பிரிவ்யூ தியேட்டரை ரெக்கார்டிங் ஸ்டுடியோவாக மாற்றுவதற்காக வாங்கி அதற்கான வேளைகளில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், பிரசாத் ஸ்டுடியோ உரிமையாளர் சாய் பிரசாத் மீது சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இசையமைப்பாளர் இளையராஜா புகார் அளித்துள்ளார்.

தனக்காக ஒதுக்கப்பட்டிருந்த அறையில் இருந்த இசை குறிப்புகளை சேதப்படுத்தியதாக பிரசாத் ஸ்டுடியோ உரிமையாளர் மீது புகார் அளித்துள்ளார்.