பாபநாசம் 2-ல் கமல் நடிப்பாரா?

0
201

பாபநாசம் 2-ல் கமல் நடிப்பாரா?

மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான படம் ‘த்ரிஷ்யம்’. இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து, தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகள் மட்டுமின்றி சீன மொழியிலும் ரீமேக் செய்யப்பட்டது. அனைத்து மொழிகளிலுமே ‘த்ரிஷ்யம்’ மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

இதையடுத்து மீண்டும் ஜீத்து ஜோசப் மோகன்லால் கூட்டணியில் த்ரிஷ்யம் 2 உருவானது. கொரோனா காலமென்பதால், இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தமிழில் பாபநாசம் என்ற பெயரில் த்ரிஷ்யம் எடுக்கப்பட்டது. இதில் கமல் ஹாசன், கெளதமி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இந்நிலையில் தற்போது த்ரிஷ்யம் 2 படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நடிகை ஸ்ரீபிரியா வாங்கியிருக்கிறார். அவர் இந்தப் படத்தில் நடித்துத் தரும்படி கமல் ஹாசனிடம் கேட்டுவருகிறார். ஆனால், கமல் தயக்கம் காட்டுகிறார்.  த்ரிஷ்யம் 2 படத்தை அனைவரும் ஓடிடி-யில் பார்த்து விட்ட நிலையில் தமிழில் எடுப்பதற்கான அவசியம் இல்லை எனக் கருதுகிறாராம் கமல். 30 நாட்சகளில் படப்பிடிப்பை முடித்து விடலாம் எனவும், கெளதமி கதாபாத்திரத்தில் மீனாவே நடிக்கட்டும் எனவும், கமலிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறாராம் ஸ்ரீபிரியா.

த்ரிஷ்யம் 2-வில் கமல் நடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது?