‘நைட்ரோ ஸ்டார்’ சுதீர் பாபு நடிக்கும் ‘ஹரோம் ஹரா’ படத்தின் டைட்டிலுக்கான பிரத்யேக காணொளி வெளியீடு
‘நைட்ரோ ஸ்டார்’ சுதீர் பாபு நடிக்கும் புதிய படத்திற்கு ‘ஹரோம் ஹரா’ என பெயரிடப்பட்டிருக்கிறது. இந்த தலைப்பிற்கான பிரத்யேக காணொளியை படக்குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள்.
‘செஹரி’ எனும் படத்தை இயக்கிய இயக்குநர் ஞானசாகர் துவாரகா இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் ‘ஹரோம் ஹரா’. இதில் ‘நைட்ரோ ஸ்டார்’ சுதீர் பாபு கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு சைத்தன் பரத்வாஜ் இசையமைக்கிறார். 1989 காலகட்டத்திய பீரியட் ஆக்சன் என்டர்டெய்னர் ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தை ஸ்ரீ சுப்ரமணியேஸ்வரா சினிமாஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுமந்த் ஜி. நாயுடு பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார். இதனை ஜி. ரமேஷ்குமார் வழங்குகிறார்.
இந்தப் படத்தைப் பற்றிய அறிவிப்பு வெளியாகும் போது, ‘அக்டோபர் 31ஆம் தேதி அன்று மாஸான சம்பவம் ஒன்று இருக்கிறது’ என அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை தற்போது பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். அந்த வகையில் ‘நைட்ரோ ஸ்டார்’ சுதீர் பாபு – ஞானசாகர் துவாரகா- சுமந்த் ஜி நாயுடு ஆகியோர் கூட்டணியில் உருவாகும் புதிய படத்திற்கு ‘ ஹரோம் ஹரா’ என பெயரிடப்பட்டு, அதற்கான பிரத்யேக காணொளி ஒன்றும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்த வீடியோவில் சித்தூர் மாவட்டம் குப்பத்தில் 1989 ஆம் ஆண்டில் நடக்கும் கதை என்பதும், அங்கு சுப்பிரமணிய சுவாமி ஆலயம், ஜகதாம்பா டாக்கீஸ் எனும் திரையரங்கம், குப்பம் ரயில் நிலையம் …போன்ற இடங்கள் இருப்பது போல் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது
‘நைட்ரோ ஸ்டார்’ சுதீர் பாபு நடிப்பில் தயாராகும் ‘ஹரோம் ஹரா’ எனும் திரைப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. படத்தை பற்றிய கூடுதல் விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
இதனிடையே ‘நைட்ரோ ஸ்டார்’ சுதீர் பாபு நடிக்கும் ‘ஹரோம் ஹரா – தி ரிவோல்ட்’ என படத்தின் தலைப்பு ஆன்மீகமாக இருந்தாலும், காணொளியில் இடம்பெற்றிருக்கும் குரல், பழிக்கு பழி வாங்கும் அம்சத்தை உரக்க எழுப்புகிறது என்பதும், சுதீர் பாபுவின் பான் இந்திய படமாக வெளியாக இருப்பதால், தலைப்பிற்கான பிரத்யேக காணொளியை அவரது ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.