நேரடியாக ஓடிடியில் வெளியாகும் நயன்தாராவின் நெற்றிக்கண்

0
224

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் நயன்தாராவின் ‘நெற்றிக்கண்’

இயக்குநர் மிலிந்த் ராவ் நயன்தாராவை வைத்து ‘நெற்றிக்கண்’ படத்தை இயக்கி முடித்துள்ளார். விக்னேஷ் சிவன் தயாரித்துள்ள இப்படத்தில் பார்வை மாற்றுத்திறனாளி பெண்ணாக நடித்துள்ள நயன்தாரா, பார்வை குறைபாடு இருந்தாலும் தனது அறிவாற்றலால் கொடூரமான சீரியல் கில்லரை எப்படி கண்டுப் பிடிக்கிறார் என்பதே கதைக்களம் என்று சொல்லப்படுகிறது. இப்படத்தில், நயன்தாராவின் சண்டைக்காட்சிகளும் ரசிகர்களின் பாராட்டுக்களைக் குவிக்கும் என்று கூறி வருகிறது படக்குழு.

சமீபத்தில் பாடகர் சித் ஸ்ரீராம் பாடியுள்ள இப்படத்தின் முதல் பாடலான ‘இதுவும் கடந்து போகும்’ பாடல் கார்த்திக் நேத்தாவின் வரிகளில் வெளியாகி கவனம் ஈர்த்தது. கொரோனாவால் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால் ’நெற்றிக்கண்’ படம் நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் அடுத்தமாதம் வெளியாகவிருக்கிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான, அதிகாரபூர்வ அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.