நெஞ்சுக்கு நீதி குழுவினரை கெளரவித்த சினிமா பத்திரிகையாளர் சங்கம்

0
215
'நெஞ்சுக்கு நீதி' 50வது நாள் வெற்றி விழா

நெஞ்சுக்கு நீதி குழுவினரை கெளரவித்த சினிமா பத்திரிகையாளர் சங்கம்

‘நெஞ்சுக்கு நீதி’ திரைப்பட 50வது நாள் வெற்றி விழா ., நேற்று , ஞாயிறு (10-07-2022) அன்று மாலை சென்னை ‘தாஜ் கொரமண்டல்’ நட்சத்திர விடுதியில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

சினிமா பத்திரிகையாளர் சங்க பொருளாளர் திரு.மரிய சேவியர் ஜாஸ் பெல் ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ திரு.செண்பகமூர்த்தி அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து ‘நெஞ்சுக்கு நீதி’ 50வது நாள் வெற்றி விழா வில் கவுரவித்தபோது…. அருகில் CPS சங்க செயற்குழு உறுப்பினர் திரு.ஜாக்மென் விஜய் & சீனியர் உறுப்பினர் திரு.பிரபு@ராம்பிரசாத்.

அது சமயம், சிறந்த சமூக நிதி கருத்துடைய அத்திரைப்படத்தை மிகச்சிறப்பாக எடுத்தமைக்காகவும் அதில் நடித்தமைக்காகவும் , இயக்கியமைக்காகவும், இயக்குனர் திரு. அருண்ராஜா காமராஜ் தயாரிப்பாளர். திரு.போனி கபூர் , இணைத்தயாரிப்பாளர் திரு.செண்பகமூர்த்தி, தயாரிப்பாளர் நடிகர் திரு.உதயநிதி ஸ்டாலின MLA உள்ளிட்டோருக்கு ., 65- ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியம் கொண்ட ‘சினிமா பத்திரிகையாளர் சங்கம் ‘ சார்பாக அதன் தலைவர் திரு.D.R.பாலேஷ்வர் , செயலாளர் திரு.R.S.கார்த்திகேயன் (நான்) , பொருளாளர் திரு.A.மரிய சேவியர் ஜாஸ் பெல், செயற்குழு உறுப்பினர்கள் திரு.மதிஒளி ராஜா, திரு.ஜாக்மென் விஜய் மற்றும் சீனியர் உறுப்பினர் திரு. ராம்பிரசாத் பிரபு உள்ளிட்டோர் சால்வை அணிவித்து மரியாதை செய்து மகிழ்வித்து மகிழ்ந்த தருணம்.