நீண்ட இடைவெளிக்குப் பின் சென்னையில் இளையராஜாவின் ‘லைவ் கான்சர்ட்’

0
98

நீண்ட இடைவெளிக்குப் பின் சென்னையில் இளையராஜாவின் ‘லைவ் கான்சர்ட்’

வெகுநாட்களுக்குப் பிறகு இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சி, சென்னையில் அடுத்த மாதம் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

தலைமுறைகளைத் தாண்டி காவியமாக நிற்கும் இசை என்றால், அது இசைஞானி இளையராஜா அமைத்த இசை என சொன்னால் மிகையாகாது. ஏனெனில் அனைத்து தரப்பினரையுமே கவரும் இசை என்பதால், காலம் தாண்டியும் நமது மனதில் நிற்கிறது. இதனால், தமிழ் திரையுலகின் முக்கிய இசையமைப்பாளராக வரும் இளையராஜா, ஏராளமான இசைநிகழ்ச்சிகளையும் நடத்தியுள்ளார். இளையராஜாவின் இசை நிகழ்ச்சி என்றாலே, உள்ளூர் ரசிகர்கள் முதல் அயல்நாடுகளில் வசிக்கும் ரசிகர்கள் வரை அனைவரும் கலந்துகொள்ள விரும்புவர். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை ஈ.வி.பி. திடலில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இதையடுத்து, சிங்கப்பூரில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடத்த திட்டமிட்ட நிலையில், கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கால் அந்த நிகழ்ச்சி தடைப்பட்டு போனது. இந்நிலையில், அதனை ஈடுகட்டும் விதமாக சென்னையில் வரும் மார்ச் மாதம் ‘ராக் வித் ராஜா’ என்ற பெயரில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். சென்னையில் எந்த திடலில், எந்த தேதியில் நடைபெறுகிறது என்ற முறையான அறிவிப்பு, இன்னும் சில தினங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.