நாளை வெளியாகிறது காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் அடுத்த பாடல்…!

0
221

நாளை வெளியாகிறது காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் அடுத்த பாடல்…!

விக்னேஷ் சிவன் இயக்கி விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்துள்ள படம் காத்துவாக்குல ரெண்டு காதல். ரொமான்டிக் காமெடி படமான இதனை ரெளடி பிக்சர்ஸ் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ளன. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் முதல் சிங்கிளான ரெண்டு காதல் பாடல் கடந்த ஆண்டு காதலர் தினத்தன்று வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து செகண்ட் சிங்கிளான டூ டூ டூ பாடல், விக்னேஷ் சிவனின் பிறந்தநாளான செப்டம்பர் 18 ம் தேதியன்று வெளியிடப்பட்டது. அனிருத் இசையமைத்து, தானே பாடி ஆடிய இந்த பாடல் அனைவரிடமும் பாராட்டை பெற்றதுடன், ரசிகர்களையும் பெரிதும் கவர்ந்தது.

இந்நிலையில் படத்தின் அடுத்த பாடலான “நான் பிழை” என்ற பாடல் நாளை வெளியிடப்படும் என விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார். இந்த பாடல் ரிலீசை முன்னிட்டு விஜய் சேதுபதி, நயன்தாரா இருக்கும் புதிய போஸ்டர் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடல் எப்படி இருக்கும் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான காதல் ஜோடிகளாக வலம் வரும் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தற்போது புத்தாண்டை கொண்டாட துபாய்க்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு பல்வேறு இடங்களுக்கு இருவரும் சேர்ந்து சுற்றுலா சென்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.