‘நான் விஜய் ரசிகன்’ – ‘பீஸ்ட்’ புகழ்பாடிய ‘பாலிவுட் பாட்ஷா’ ஷாருக்கான்

0
115

‘நான் விஜய் ரசிகன்’ – ‘பீஸ்ட்’ புகழ்பாடிய ‘பாலிவுட் பாட்ஷா’ ஷாருக்கான்

தம்மைப் போலவே விஜய் ரசிகனாக இருக்கும் இயக்குநர் அட்லியுடன் இணைந்து பீஸ்ட் டிரெய்லர் பார்த்ததாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷா ரூக் கான் கூறியுள்ளார்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் “பீஸ்ட்”. ஏப்ரல் 13 ஆம் தேதி உலகம் முழுவதும் பீஸ்ட் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் பீஸ்ட் திரைப்படம் குறித்து பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷா ரூக் கான் டிவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “என்னைப் போலவே விஜயின் ரசிகனாக திகழும் அட்லியுடன் இணைந்து பீஸ்ட் படத்தின் டிரெய்லரை பார்த்தேன். டிரெய்லர் மிகவும் சிறப்பாக, கச்சிதமாக உள்ளது. ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் என் வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஷாரூக் கானின் பதிவை டேக் செய்து இயக்குநர் அட்லியும் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், “என்னுடைய அண்ணன், என்னுடைய தளபதி, விஜய் அண்ணாவின் பீஸ்ட் ஏப்ரல் 13 அன்று வெளியாகிறது. ஷாரூக் கானின் அன்பான வாழ்த்துகளுக்கு என் நன்றிகள். தங்கள் வாழ்த்து மிகப் பெரியது. நன்றி! லவ் யூ சார்!” என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த டிவிட்டர் பதிவுகளும் வைரலாகி வருகின்றன.