நானும் சிங்கள் தான் விமர்சனம்

0
789

நானும் சிங்கள் தான் விமர்சனம்

த்ரீ இஸ் எ கம்பெனி புரொடக்ஷன்ஸ் ஜெயகுமார், புன்னகை பூ கீதா இணைந்து தயாரித்துள்ள நானும் சிங்கிள் தான் படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் ஆர்.கோபி.
தினேஷ், தீப்தி சதி, மொட்ட ராஜேந்திரன், மனோபாலா, செல்வேந்திரன், ஆதித்யா கதிர், விகாஷ் சம்பத், ரமா நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு- கே.ஆனந்தராஜ், இசை-ஹித்தேஷ் மஞ்சுநாத், பாடல்கள்-கபிலன் வைரமுத்து, எடிட்டிங்-ஆண்டனி, சண்டை-கனல்கண்ணன், ஆடம் ரிச்சர்ட்ஸ், கலை இயக்குனர்-ஆண்டனி, நடனம்-சின்னி பிரகாஷ், ரேகா சின்னி பிரகாஷ், அபிப், பிஆர்ஒ-மௌனம்ரவி, மணவைபுவன்.

திருமண பந்தத்தை விரும்பாத தீப்தி காதலி கிடைக்காமல் ஏங்கும் தினேஷ் ஆகிய இருவரும் சந்திக்க நட்பு மலர்கிறது. ஏதிர்பாராதவிதமாக ஏற்படும் மனக்கசப்பால் தீப்தி தினேஷை விட்டு பிரிந்து லண்டன் செல்கிறார். தினேஷ் தீப்தியை தேடி லண்டன் செல்ல இவரின் காதலை சேர்த்து வைக்க மொட்ட ராஜேந்திரன் உதவி செய்கிறார். தீப்தியை காதலிக்குமாறு தினேஷ் தொந்தரவு செய்ய இதனால் தீப்தியின் வேலையும் பறிபோய்விடுகிறது. தினேஷை வெறுத்து தீப்தி தாயகம் திரும்புகிறார். இவர்களின் காதல் கை கூடியதா? என்பதே மீதிக்கதை.

தினேஷ், தீப்தி சதி, மொட்ட ராஜேந்திரன், மனோபாலா, செல்வேந்திரன், ஆதித்யா கதிர், விகாஷ் சம்பத், ரமா ஆகிய அனைவருமே அளவான நடிப்பை கொடுத்துள்ளனர்.

கே.ஆனந்தராஸ் ஒளிப்பதிவு, ஹித்தேஷ் மஞ்சுநாத் இசை, கபிலன் வைரமுத்துவின் பாடல்கள் என்று அனைத்தும் சிறப்பாக உள்ளது.

கதை, திரைக்கதை, வசனம்-ஆர்.கோபி. வெவ்வேறு குணாதியங்கள் கொண்ட இருவரும் காதலால் ஒன்றாக இணைந்தார்களா? என்பதை சுற்றி வலைத்து சொல்லாமல் நேராக சம்பவங்களை அமைத்து சொல்லியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். கதைக்கான காட்சிகள் இளமையாகவும்,டிஜிட்டல் உலகில் இளைஞர்கள் வாழ்வில் எடுக்கும் சில சிக்கலான  முடிவுகளையும், ஃபெமினிசம் தொடர்பான சில விஷயங்களையும் குறிப்பாக இன்று பெண்களுக்கு நடக்கும்  பாலியல் கொடுமைகளைப் மையப்படுத்தி  சில காட்சிகளும் படத்தின் சிறப்பம்சம்.

நானும் சிங்கிள் தான் 90ஸ் கிட்ஸ்களின் கொண்டாட்டம்.