நயன்தாரா – விக்னேஷ் சிவன் படம் மூலம் நடிகையாக அறிமுகமாகும் கலா மாஸ்டர்

0
130

நயன்தாரா – விக்னேஷ் சிவன் படம் மூலம் நடிகையாக அறிமுகமாகும் கலா மாஸ்டர்

பிரபல நடன இயக்குனரான கலா மாஸ்டர், தமிழ், தெலுங்கு, மலையாளம் உட்பட பல்வேறு மொழி படங்களில் பணியாற்றியுள்ளார். ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களுக்கு அவர் நடனம் அமைத்துள்ளார். இதுதவிர சின்னத்திரையிலும் மானாட மயிலாட என்கிற நடன நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தினார்.

சினிமா மற்றும் சின்னத்திரையில் 20 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் அவர், தற்போது நடிகையாக அறிமுகமாக உள்ளார். அதன்படி விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் கலா மாஸ்டர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம்.

நயன்தாரா, விக்னேஷ் சிவன் கேட்டுக் கொண்டதால் நடிக்க ஒத்துக்கொண்டதாகவும், தொடர்ந்து சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்றும் கலா மாஸ்டர் தெரிவித்துள்ளார்.

‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக சமந்தாவும், நயன்தாரா-வும் நடித்துள்ளனர். இப்படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனமும், விக்னேஷ் சிவன் – நயன்தாராவின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன.