நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் திருப்பதியில் இல்லை…. ஏன் தெரியுமா? வைரலாகும் அழைப்பிதழ்!

0
174

நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் திருப்பதியில் இல்லை…. ஏன் தெரியுமா? வைரலாகும் அழைப்பிதழ்!

சிம்புவின் ‘போடா போடி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இதையடுத்து 2015-ம் ஆண்டு அவர் இயக்கிய ‘நானும் ரவுடி தான்’ படத்தின் போது, நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இவர்களது காதல் 6 ஆண்டுகளாக நீடித்து வருகிறது.

இதையடுத்து, ரசிகர்கள் நயன்தாரா – விக்னேஷ் சிவனின் திருமணம் குறித்து சமூக வலைதளங்களில் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வந்தனர். ரசிகர்களுக்கு பதிலளிக்கும் விதமாக இருவருக்கும் ஜூன் 9-ஆம் தேதி திருப்பதியில் வைத்து திருமணம் நடைபெறும் என்று தகவல் வெளியானது.

தற்போது திருமண இடத்தை அவர்கள் மாற்றி வைத்துள்ளனர். 150 விருந்தினர்கள் கூட திருமணத்தில் கலந்து கொள்ள திருப்பதி கோவில் நிர்வாகம் அனுமதிக்கவில்லை என்பதால் திருமண இடத்தை மாற்றி இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி சென்னை, மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரெசார்ட்டில் ஜூன் 9-ம் தேதி விமர்சையாக திருமணம் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இதன் அழைப்பிதழ் சமூக வலைத்தள பக்கத்தில் வைரலாகி வருகிறது.

மேலும், சமீபத்தில் விக்னேஷ் சிவனின் குல தெய்வம் கோவிலுக்கு சென்று நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் வழிபாடு நடத்திய புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் வைரலானதைத் தொடர்ந்து இருவரின் திருமணத்திற்காக தான் இந்த வழிபாடு என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.