நயன்தாராவின் மலையாளப் படம் ’நிழல்’ வெளியீட்டு தேதி அறிவிப்பு

0
306

நயன்தாராவின் மலையாளப் படம் ’நிழல்’ வெளியீட்டு தேதி அறிவிப்பு

கடந்த 2019 ஆம் ஆண்டு நயன்தாரா மலையாளத்தில் நிவின் பாலி ஜோடியாக நடித்த ‘லவ் ஆக்‌ஷன் டிராமா’ படம் வெற்றி பெற்றதோடு, ’குடுக்கு பட்டிய குப்பாயம்’ பாடல் வைரல் ஹிட் ஆனது. அதனால், மீண்டும் பிரபல படத்தொகுப்பாளர் அப்பு என். பட்டாத்திரி இயக்கத்தில் ’நிழல்’ படத்தில் நடித்து வருகிறார். த்ரில்லர் படமான இதில் நயன்தாராவுக்கு ஜோடியாக குஞ்சாக்கோ போபன் நடிக்கிறார்.

ஏற்கனவெ, குஞ்சாக்கோ போபனுடன் ’ட்வென்டி 20’ படத்தில் சிறிய வேடத்தில் நயன்தாரா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 12 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ளனர். இந்நிலையில், நிழல் படம் வரும் ஏப்ரல் 4 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனால் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.