நடிகை நயன்தாராவின் தந்தை மருத்துவமனையில் அனுமதி

0
169

நடிகை நயன்தாராவின் தந்தை மருத்துவமனையில் அனுமதி

நடிகை நயன்தாராவின் தந்தை குரியன் கோடியாட்டு உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தென்னிந்தியாவின் முன்னணி நடிகையான நயன்தாராவின் தந்தை குரியன் கோடியாட்டு இந்திய விமானப்படையில் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். தற்போது, தனது மனைவி ஓமனா குரியனுடன் கேரளாவின் கொச்சினில் வசித்து வருகிறார்.

சமீப காலமாகவே உடநலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்த குரியன் தற்போது கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டிருக்கிறார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.