நடிகை சாக்ஷி அகர்வால் – நவ்நீத் தம்பதிக்கு சினிமா பத்திரிகையாளர் சங்கம் சிறப்பு!!
ஐடி துறையில் பணியாற்றிய சாக்ஷி அகர்வால், மெல்ல மெல்ல மாடலிங் துறையில் கால் பதித்து, இதன் மூலம் கிடைத்த பிரபலத்தை வைத்து, நடிகையாக மாறினார். இயக்குனர் அட்லி இயக்கத்தில், நயன்தாரா, ஜெய், நஸ்ரியா, நடிப்பில் வெளியான ‘ராஜா ராணி’ படம் மூலம் அறிமுகமானார். ரஜினிகாந்த் நடிப்பில், 2018 ஆம் ஆண்டு வெளியான ‘காலா’ திரைப்படத்தில் ரஜினிகாந்துக்கு மருமகளாக நடித்தார். அஜித்தின் விஸ்வாசம், அரண்மனை 3 என பல படங்களில் நடித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் இன்னும் பிரபலமானார்.
இந்நிலையில், இவர் சிறிய வயது நண்பனான நவ்நீத் என்பவரைப் பல வருடங்களாகக் காதலித்து வந்தார். இவர்கள் திருமணத்துக்கு இரு குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, கோவாவில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் 02-01-2025 அன்று திருமணம் செய்துகொண்டனர்.
இதில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இதையடுத்து திரையுலகினரும் ரசிகர்களும் அவர் களுக்கு சமூக வலைதளத்தில் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் திருமணம் முடிந்த பின் புதுமன தம்பதியரான நடிகை சாக்ஷி அகர்வால் – நவ்நீத் ஜோடி சென்னை, பிரசாத் லேப் திரை வளாகத்தில் சினிமா பத்திரிகையாளர்களை சந்தித்து ராஜஸ்தானி பாரம்பரிய முறையில் திருமண விருந்தளித்து ஆசிபெற்றறார்.
நிகழ்வில், 70 வது ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் மணமக்களுக்கு சங்க செயலாளர் R.S.கார்த்திக் ., சீனியர் உறுப்பின தம்பதிகள் ‘கலைப்பூங்கா’ T.R.ராம்பிரசாத்@பிரபு – T.R.விஜயலட்சுமி மற்றும் சுரேஷ் சுகு உள்ளிட்டோர் சால்வைகள் அணிவித்து திருமலை திருப்பதி தேவஸ்தான நாட்குறிப்பை திருமண பரிசாக வழங்கிய தருணம். உடன் இந்நிகழ்வின் மக்கள் தொடர்பாளர் ரியாஸ்.கே.அகமது மற்றும் சாக்ஷி அகர்வாலின் தந்தை உள்ளிட்டோர்.