நடிகை குஷ்புவுக்கு திடீர் அறுவை சிகிச்சை
1990களில் தமிழ் சினிமாவின் டாப் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகை குஷ்பு.
தற்போது தயாரிப்பாளர், அரசியல் என பிசியாக இயங்கி வருகிறார்.
இந்நிலையில் அவரது வலது கண்ணில் அறுவை சிகிச்சை செய்து கொண்டதை தெரிவிக்கும் விதமாக கண்ணில் கட்டு துணியோடு உள்ள போட்டவை அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார.
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். இன்று காலை என் கண்ணுக்கு கீழ் கத்தி வைக்கப்பட்டதால் அடுத்த சில நாட்களுக்கு வழக்கம்போல ஆக்டிவாக என்னால் இயங்க முடியாது.
விரைவில் குணமடைந்து திரும்பி வருவேன் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்.
வெளியே செல்பவர்கள் முகக்கவசம் அணிவதோடு போதுமான இடைவெளியை கடைபிடியுங்கள் என குஷ்பு தெரிவித்துள்ளார். அவருக்கு ரசிகர்கள் பலரும் GET WELL SOON என கமெண்ட் கொடுத்து வருகின்றனர்.
Hi friends, will be inactive for a while as I had to go under a knife for my eye this morning.. promise to be back soon. Take care, wear a mask if heading out and maintain a distance. ❤ pic.twitter.com/K7d5plvsym
— KhushbuSundar ❤️ (@khushsundar) August 19, 2020