நடிகர் விமல் மீது ரூ.5 கோடி மோசடி புகார்

0
114

நடிகர் விமல் மீது ரூ.5 கோடி மோசடி புகார்

சென்னை பெரவள்ளூரைச் சேர்ந்தவர் கோபி (வயது 43). சினிமா தயாரிப்பாளரான இவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை நேற்று கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-

களவாணி, களவாணி-2 உள்ளிட்ட ஏராளமான தமிழ் படங்களில் நடித்தவர் விமல். இவர் மன்னர் வகையறா என்ற படத்தை எடுத்தபோது என்னிடம் கடனாக ரூ.5 கோடி வாங்கினார். அந்தப் படத்தின் லாபத்திலும் பங்கு தருவதாக தெரிவித்தார்.

ஆனால் என்னிடம் வங்கிய கடன் தொகை ரூ.5 கோடியை நடிகர் விமல் திருப்பித்தரவில்லை. அவர் தற்போது 10-க்கும் மேற்பட்ட படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் எனக்கு தரவேண்டிய ரூ.5 கோடியை திருப்பித்தராமல் மோசடி செய்துவிட்டார்.

பணத்தை கேட்டால் எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார். எனவே நடிகர் விமல் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து, அவர் எனக்கு தரவேண்டிய ரூ.5 கோடி பணத்தை வசூலித்து தரும்படி வேண்டுகிறேன்.

இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.