நடிகர் விஜயின் ‘பீஸ்ட்’ படத்தின் முக்கிய அப்டேட் – ரசிகர்கள் உற்சாகம்

0
113

நடிகர் விஜயின் ‘பீஸ்ட்’ படத்தின் முக்கிய அப்டேட் – ரசிகர்கள் உற்சாகம்

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் முக்கிய அப்டேட், இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளதால், ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் தற்போது ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். ‘பீஸ்ட்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக, பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும், சைன் டாம் சாக்கோ, செல்வராகவன், யோகிபாபு உள்ளிட்ட பிரபலங்களும் முக்கிய கதாபாத்திரத்தில் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் இந்தப்படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் தொடங்கியது. பின்னர் சென்னையில் ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது.

சமீபத்தில் ‘பீஸ்ட்’ படப்பிடிப்பின் 100-வது நாளை படக்குழு புகைப்படம் எடுத்து வெளியிட்டு இருந்தது. இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகின்றது. கொரோனா ஊரடங்குகள் படிப்படியாக தளர்த்தப்பட்டநிலையில், அஜித்தின் ‘வலிமை’, ராஜமெளலியின் ‘ஆர்ஆர்ஆர்’, பிரபாஸின் ‘ராதே ஷ்யாம்’ உள்ளிட்ட மாஸ் ஹீரோக்கள் படங்களின் ரிலீஸ் தேதி சமீபத்தில் ஒவ்வொன்றாக அறிவிக்கப்பட்டது. இதனால் விஜயின் ‘பீஸ்ட்’ படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் கேட்டு வந்தனர்.

இந்நிலையில், தயாரிப்பு நிறுவனம் ‘பீஸ்ட’ படத்தின் முக்கிய அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதால், எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்த அப்டேட் டிரெயிலர் குறித்த அறிவிப்பா அல்லது படம் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பா என்று இன்று மாலை தெரியவரும். இதனால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.