நடிகர் மாதவன் மகனுக்கு நடிகை ப்ரீத்தி ஜிந்தா வாழ்த்து

0
74

நடிகர் மாதவன் மகனுக்கு நடிகை ப்ரீத்தி ஜிந்தா வாழ்த்து

நீச்சல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற நடிகர் மாதவனின் மகன் வேதாந்திற்கு பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

டென்மார்க்கில் நடைபெற்ற டேனிஷ் ஓபன் நீச்சல் போட்டியின் 800 மீட்டர் நீச்சல் பிரிவில் நடிகர் மாதவன் மகன் வேதாந்த் மாதவன் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதுதொடர்பாக நடிகர் மாதவன் தனது ட்விட்டர் பக்க பதிவில், இந்த சாதனை மகிழ்ச்சியை அளிப்பது மட்டுமின்றி நாடே பெருமை கொள்வதாகவும், இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கக் கூடியதாகவும் இருக்கும் என்று தெரிவித்தார். இந்தியா சார்பில் விளையாடி பதக்கம் வென்ற மாதவனின் மகனுக்கு பலருக்கும் வாழ்த்துகளை கூறி வருகின்றனர். அந்த வகையில் பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தாவும் வேதாந்துக்கு வாழ்த்துகளை தெரிவித்து இருக்கிறார்.

இதுதொடர்பாக ப்ரீத்தி ஜிந்தா வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “ஆஹா! இது மிகவும் சிறப்பான செய்தி. நடிகர் மாதவன் மற்றும் அவரது மனைவி சரிதா இருவருக்கும் வாழ்த்துகள். நீங்கள் இருவரும் ஒரு அற்புதமான வேலையைச் செய்திருக்கிறீர்கள். வேதாந்த் இப்படி வெற்றியில் ஜொலிப்பதைக் கண்டு மகிழ்ச்சியடைகிறேன். கடவுள் அவரை மேலும் வெற்றியுடனும் மகிழ்ச்சியுடனும் ஆசீர்வதிப்பாராக” என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக நடிகை பிரியங்கா சோப்ராவும் நடிகர் மாதவனின் மகனுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.