நடிகர் மகேஷ் பாபுவின் அண்ணன் ரமேஷ் பாபு மாரடைப்பால் காலமானார்
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் கிருஷ்ணாவின் மூத்த மகனும் நடிகர் மகேஷ் பாபுவின் அண்ணனுமான ரமேஷ் பாபு மாரடைப்பு காரணமாக காலமானார். இவர் 1974ஆம் ஆண்டு வெளியான ‘சீதாராமா ராஜு’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி பிறகு சில படங்களில் மட்டுமே நடித்து அதன்பிறகு தயாரிப்பில் ஈடுப்பட்டிருந்தார். இவருடைய தயாரிப்பில் மகேஷ் பாபு நடித்து வெளியான அர்ஜுன், அதிதி ஆகிய படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
ரமேஷ் பாபு நீண்ட காலமாக கல்லீரல் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக மருத்துவமனையில் சிகிச்சையும் மேற்கொண்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று (ஜன 08) ரமேஷ் பாபு(வயது 56) காலமானார். அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்தில் நடிகர் மகேஷ் பாபுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர் தனிமைப்படுத்தி கொண்டுவருவது குறிப்பிடத்தக்கது.