நடிகரும், இயக்குனருமான பிரதாப் போத்தன் உடல்நலக்குறைவால் காலமானார்

0
152

நடிகரும், இயக்குனருமான பிரதாப் போத்தன் உடல்நலக்குறைவால் காலமானார்

பிரபல திரைப்பட இயக்குநரும் நடிகருமான பிரதாப் போத்தன், உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் பிரதாப் போத்தன். வறுமையின் நிறம் சிவப்பு, நெஞ்சத்தை கிள்ளாதே. பன்னீர் புஷ்பங்கள்வாழ்வே மாயம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். வெற்றி விழா, டியர் மார்த்தாண்டன், சீவலப்பேரி பாண்டி, லக்கி மேன் உள்ளிட்ட படங்களை பிரதாப் போத்தன் இயக்கத்தில் வெளியானவையாகும்.

ஃபிலிம் ஃபேர் உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பிரதாப் போத்தன் பெற்றுள்ளார். பல விருது நிகழ்ச்சிகளுக்கு தேர்வுக்குழுவிலும் அவர் இடம்பெற்றிருந்தார். மலையாளம் மூலமாக திரைத்துறைக்கு அறிமுகமான பிரதாப் போத்தன், அழியாத கோலங்கள் படம் மூலமாக தமிழில் அறிமுகமாகியிருந்தார். தமிழில் இறுதியாக துக்ளக் தர்பார் என்ற படத்தில் சிறப்புத் தோற்றத்தில் அவர் நடித்திருந்தார்.