தொழிலதிபர் விஜய் சங்கேஸ்வரன் சாதனைகள் வாழ்வில் வெற்றிபெற விரும்பும் அனைவருக்கும் பாடம் – விஜயானந்த் திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் நிஹால் பேச்சு!

0
180

தொழிலதிபர் விஜய் சங்கேஸ்வரன் சாதனைகள் வாழ்வில் வெற்றிபெற விரும்பும் அனைவருக்கும் பாடம் – விஜயானந்த் திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் நிஹால் பேச்சு!

உலகில் வெற்றிக்கு பல விதிகள் இருக்கும் ஆனால் வெற்றிபெற்றவன் கதை வேறு மாதிரி இருக்கும். உண்மையில் வெற்றி பெற்றவனின் வாழ்க்கை தான் வெற்றிக்கான வழிகாட்டி. கர்நாடகா மாநிலத்தின் ஒரு கிராமத்தில் ஒரு சிறு டிரக்கை வைத்து கொண்டு பிஸினஸ் ஆரம்பித்து 5500 வாகனங்களுக்கு சொந்தக்காரராக மாறிய ஒரு மிகப்பெரும் பிஸினஸ்மேனின் அசாதாரணமான வாழ்க்கை தான் “விஜயானந்த்” திரைப்படம். பிரமாண்ட பட்ஜெட்டில் பான் இந்திய திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் டிசம்பர் மாதம் ஒன்பதாம் தேதியன்று தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி என‌ இந்திய மொழிகளில் வெளியாகிறது.

வணிக ரீதியிலான சாலை போக்குவரத்து வாகனத்தை இயக்கும் தொழிலில், இந்திய அளவில் முன்னணி நிறுவனமான வி ஆர் எல் எனும் நிறுவனத்தின் உரிமையாளரும், தொழிலதிபருமான விஜய் சங்கேஸ்வரின் வாழ்க்கை வரலாற்றை தழுவி இத்திரைப்படம் உருவாகியுள்ளது.

இயக்குநர் ரிஷிகா சர்மா இயக்கத்தில் தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தில் கதையின் நாயகனான விஜய் சங்கேஸ்வர் கதாபாத்திரத்தில் நடிகர் நிஹால் நடித்திருக்கிறார். இவருடன் ஆனந்த் நாக், ரவிச்சந்திரன், பாரத் பொப்பண்ணா, பிரகாஷ் பெலவாடி, ஸ்ரீ பிரகலாத், வினயா பிரசாத், அர்ச்சனா, அனிஷ் குருவில்லா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கீர்த்தன் பூஜாரி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கோபி சுந்தர் இசையமைத்திருக்கிறார். சுய சரிதையை தழுவி தயாராகும் இந்த திரைப்படத்தை வி ஆர் எல் ஃபிலிம்ஸ் நிறுவனம், பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது.

இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினருடன் கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மையா கலந்து கொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் பிரமாண்டமாக நடைபெற்றது.

இவ்விழாவினில்..

நடிகர் நிஹால் பேசியதாவது…
ஒரு தலைமுறைக்கு நம்பிக்கை தரும் மிகப்பெரும் சாதனையாளராக நான் நடிப்பது பெருமை. நாம் எல்லாம் சாதாரண மனிதர்கள் லீவு நாளில் ஓய்வெடுப்போம் ஆனால் இவர் எத்தனையோ ஆண்டுகள் ஓய்வில்லாமல் உழைத்திருக்கிறார். அவரது சாதனைகள் வாழ்வில் வெற்றிபெற விரும்பும் அனைவருக்கும் பாடம். இதனை திரைப்படமாக எடுப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். இப்படத்திற்காக அனைவரும் கடுமையாக உழைத்துள்ளனர். அனைத்து மொழிகளிலும் இப்படத்தை கொண்டாடுவார்கள் என நம்புகிறேன்.

விஜயானந்த் திரைப்படம் டிசம்பர் டிசம்பர் 9 ஆம் தேதி தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி என‌ இந்தியாவின் பல மொழிகளில் வெளியாகிறது.

Banner: VRL Film Productions
Produced By: Dr. Anand Sankeshwar
Written And Directed By: Rishika Sharma
Starring: Shri Anant Nag, Nihal, Bharath Bopanna, Siri Prahalad,
Vinaya Prasad, Prakash Belawadi, V Ravichandran,
Anish Kuruvilla, Ramesh Bhat, Dayal Padmanabhan,
Shine Shetty, Archana Kottige
Music And Background Score: Gopi Sundar C
Singers: Vijay Prakash, Keerthana Vaidynathan
Dialogues: Madhurakavi
Director Of Photography: Keertan Poojary
Direction Team: Shamsheer, Santhosh Ravi,
Prateek K U, Chandrashekhar Madabhavi
Production Execution: Welldone Cinemas Llp
Creative Head/Editor: Hemanth Kumar D
Production Head: Prabhu Metimath
Stunts: Ravi Varma
Colourist: Prasath Somasekar
Choreography: Imran Sardhariya
Art Execution: Anil Kabir
Costume Execution: Shantha Rao T
Colourist: Prasath Somasekar
Art And Costume Designing- Rishika Sharma
Dubbing Engineer: Harish
Sound Design & Dolby Atmos Mix: T.Uday Kumar @Knack Studios
Atmos Premix: Renjith Venugopal, M.Sarvana Kumar @Knack Studios
Vfx Head: Santha Kumar P @Rpm Studio
Publicity Design: Kaani Studios
Makeup: Prakash Gokak
Art Direction: Rishika Sharma
Art Execution: Anil Kabir
Costume Designing: Rishika Sharma
Costume Execution: Shantha Rao T , Laxmi Krishna
Marketing Execution: Tejashwini Patil, Prateek K U
Pro : Sudheendra Venkatesh (Kannada), Hema Upadhya (Hindi),
Vamsi Kaka (Telugu), Yuvaraaj (Tamil), Sabrish (Malayalam)
Record Label: AANANDA AUDIO VIDEO