தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாகும் ஸ்ருதிஹாசன்: பூஜையுடன் துவங்கிய படப்பிடிப்பு

0
174

தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாகும் ஸ்ருதிஹாசன்: பூஜையுடன் துவங்கிய படப்பிடிப்பு

தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா நடிகை ஸ்ருதிஹாசன் இணையும் படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது.

ஸ்ருதிஹாசன் நடிப்பில் கடைசியாக விஜய் சேதுபதி நடிப்பில் ‘லாபம்’ வெளியானது. அடுத்ததாக, ஸ்ருதிஹாசன் ‘கேஜிஎஃப்’ இயக்குநர் பிரஷாந்த் நீலின் இயக்கத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக ‘சலார்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில், தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பும் ஸ்ருதிஹாசன் இணைந்ததும் வெளியானது. இப்படத்தை, தெலுங்கில் வசூல் சாதனை செய்த ‘க்ராக்’ படத்தின் இயக்குநர் கோபிசந்த் மாலினேனி இயக்கவிருக்கிறார்.

ஏற்கனவே, ‘க்ராக்’ படத்தில் ஸ்ருதிஹாசன் தான் ஹீரோயின் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இன்று பாலகிருஷ்ணா – ஸ்ருதிஹாசன் இணையும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. பூஜையில், ஸ்ருதிஹாசன், பாலகிருஷ்ணா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இப்படத்தை, மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிரது என்பது குறிப்பிடத்தக்கது.