தெறிக்கவிடும் அல்லு அர்ஜுனின் புஷ்பா ட்ரைலர் வெளியீடு
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் தெலுங்கின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன் நடித்துள்ள திரைப்படம் ‘ புஷ்பா’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது .தேவிஸ்ரீ பிரசாத் இசைமைத்துள்ளார்.
இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். வில்லனாக நடிகர் ஃபகத் ஃபாசில் நடித்துள்ளார்.
இந்நிலையில் ‘புஷ்பா’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் வருகிற டிசம்பர் 17ம் தேதி வெளியாகிறது.
செம்ம கலர்ஃபுல்லாக வெளியாகியிருக்கும் ட்ரைலரில் அல்லு அர்ஜுன் செம்மரக்கட்டை கடத்தல்காரராக மிரட்டல் நடிப்பில் தெறிக்கவிடுகிறார். அவரின் உடல் மொழி சில இடங்களில் வீரப்பனை நினைவூட்டி அட போடவைக்கிறது.
Here it is! #PushpaTrailer out now.
Telugu : https://t.co/bGt9hVVzP8
Tamil : https://t.co/Z668h8gH2G
Kannada : https://t.co/kAMdZolPHf
Malayalam : https://t.co/5ZiGRnSEkC #PushpaTheRise #PushpaTheRiseOnDec17th pic.twitter.com/Kw5qRvNn10— Allu Arjun (@alluarjun) December 6, 2021