தூநேரி விமர்சனம்: தூநேரி எதிரெதிரே மோதிக்கொள்ளும் இரண்டு பேய்களின் திகிலூட்டும் யுத்தம்

0
163

தூநேரி விமர்சனம்: தூநேரி எதிரெதிரே மோதிக்கொள்ளும் இரண்டு பேய்களின் திகிலூட்டும் யுத்தம்

ஷாடோ லைட் என்டர்டைன்மென்ட் சார்பில் சுனில் டிக்ஸன் தயாரித்து இயக்கியிருக்கும் படம் தூநேரி.

இதில்  நிவின் கார்த்திக், ஜான் விஜய், மியாஸ்ரீ, குழந்தைகள் அஸ்மிதா, நகுல்,அபிஜித், சாத்விகா ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு- கலேஷ், ஒலி வடிவமைப்பு-ஆலன், தொகுப்பு-ஃபிடல் காஷ்ரோ, கலை-ரூபேஷ், இசை-கலையரசன், சண்டை-டிரகன் ஜீரொஷ், பயர் கார்த்தி, மக்கள் தொடர்பு-ஜான்.

சென்னையில் பணி புரியும் போலீஸ் அதிகாரி நிவின் கார்த்திக் மகளின் பள்ளித் தோழியை அவளது சித்தியினால்  கொடுமைப் படுத்தப்படுகிறாள்.இதை அறிந்த போலீஸ் அதிகாரி நிவின் பாதிக்கப்பட்ட சிறுமியின் அப்பாவிடம் சொல்ல, அந்த சிற்றன்னை போலீஸ் ஸ்டேஷனுக்கே வந்து கலாட்டா செய்து விட்டுப் போகிறாள்.  ஊட்டி அருகில் இருக்கும் தூநேரி  என்ற கிராமத்தில் காவல்காரனாக இருந்து பின்னர் மக்களால் திருடன் என தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு, கொல்லப்பட்ட கருப்பசாமி என்பவன் கெட்ட ஆன்மாவாக உலவி வருவதாக ஊர் நம்புகிறது. அதனால் பகலில் அழகாக காட்சியளிக்கும் இந்த கிராமத்தில் இரவில் அடுத்தடுத்து மர்மமான முறையில் சில மரணங்கள் நிகழ்கின்றன. இந்த நிலையில் போலீஸ் அதிகாரி தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் மாற்றல் ஆகி தூநேரிக்கு வரும் அவர்கள் கருப்பசாமி கல்லறை பக்கத்தில் உள்ள வீட்டில் தங்குகிறார்கள்;. மர்மமான முறையில் நிகழும் மரணங்களை கண்டுபிடிக்க போலீஸ் அதிகாரி விசாரணை தொடங்கி அதை நெருங்கி செல்லும்போது அடுத்தடுத்து மர்ம முடிச்சுகளை காண்கிறார். ஊர் மக்களால் வளர்க்கப்படும் – கருப்பசாமியின் மகன் போலீஸ் அதிகாரியின் பிள்ளைகளுக்கு நண்பன் ஆகிறான். மக்கள் அனைவரும் பேய் பயத்தில் இருக்கும் வேலையில் அந்த போலீஸ் அதிகாரியின் மனைவியையும் பேய் பிடிக்கிறது. இந்த மரணங்களுக்கான பின்னணியில் இருக்கும் மர்மம் என்ன? அதை போலீஸ் அதிகாரி கண்டுபிடித்தாரா? யார் அந்த பேய்? இதற்கு காரணம் கருப்பசாமி தானா? என்பதே க்ளைமேக்ஸ்.

மிடுக்கும், கம்பீரமான, எதற்கும் பயப்படாத போலீஸ் அதிகாரி தோற்றத்தில் நிவின் கார்த்திக், முதலில் கெட்டவனாக சித்தரிக்கப்படும் கருப்பசாமியாக ஜான் விஜய் பின்னர் நல்லவனாக காட்சிப்படுத்தப்படுவது அருமை.

நிவின் அழகான மனைவியாக மியாஸ்ரீ பயமுறுத்தி மிரள வைக்கிறார். குழந்தைகள் அஸ்மிதா, நகுல்,அபிஜித், சாத்விகா அனைவரும் பயப்படாமல் சுட்டித்தனமான செய்கையும் மற்றும் நடிப்பும் மிகச்சிறப்பு.

சென்னையையும், துநேரியையும், மலைக்கிராமத்தையும், பழங்காலத்து பங்களாவையும் திறம்பட காட்சிக்கோணங்களில் கொடுத்தும், அமானுஷ்ய காட்சிகளையும் பயமுறுத்தும் கோணத்தில் படம் பிடித்து அசத்தியுள்ளளார் ஒளிப்பதிவாளர் கலேஷ்.

மிரட்டலான இசையில் கலையரசனும், டிரகன் ஜீரொஷ், பயர் கார்த்தி சண்டைக் காட்சிகளும் கதைக்களத்திற்கேற்ற பங்களிப்பை கொடுத்து பலம் சேர்த்துள்ளனர்.
அனிமேஷன் காட்சிகளை பல வெற்றிப்படங்களில் வடிவமைத்த சுனில் டிக்ஸன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். பழி வாங்க துரத்தும் பேய், ஊர் மக்களை காக்க போராடும் பேய் இரண்டிற்கும் நடுவே ஒரு குடும்பம் குழந்தைகளோடு அமானுஷ்ய பிடியில் சிக்கிக் கொண்டு போராடி வெளியே வரும் கதையில் செண்டிமென்ட், ஆக்ஷன், பழி வாங்குதல், கொலை என்று பல மர்மங்களை கொண்டு வந்து இறுதியில் பழி வாங்குவது யார் என்பதை சஸ்பென்சாக சொல்லி அனிமேஷன் கலந்த காட்சிகளையும் சிறப்பாக இயக்கியிருக்கிறார் இயக்குனர் சுனில் டிக்ஸன்.

மொத்தத்தில் தூநேரி எதிரெதிரே மோதிக்கொள்ளும் இரண்டு பேய்களின் திகிலூட்டும் யுத்தம்.