‘தி கோட்’ ஸ்குவாட்… விரைவில் பாக்ஸ் ஆபிஸை தெரிக்க காத்திருக்கும் ஒரு அதிரடி பொழுதுபோக்கு ‘ஃபயர்’
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் ‘தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’ (The Greatest Of All Time) படத்தில் நடிகர் விஜய் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சித்தார்த்த முனி ஒளிப்பதிவு செய்கிறார். ‘தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே நேற்று இந்த படத்தின் அப்டேட் குறித்து இயக்குனர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்தார். அதில், இது ‘தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’ பொங்கலாக இருக்கும்.. என்று பதிவிட்டிருந்தார்.
வெங்கட் பிரபுவின் இந்த பதிவை மறுபதிவு செய்த தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, “கண்டிப்பாக.. ‘தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் ‘தளபதி பொங்கலாக இருக்கபோகிறது..” என்று பதிவிட்டிருந்தார்.
Meet the #GOATsquad 🔥🔥 They are all ready to set the box office on fire 🔥
One action entertainer loading ❤️ #TheGreatestOfAllTime #AGS25 #Thalapathy68 @actorvijay Sir@ags_production #KalpathiSAghoram #KalpathiSGanesh #KalpathiSSuresh @vp_offl @archanakalpathi… pic.twitter.com/AHQbJTp6Wx— Archana Kalpathi (@archanakalpathi) January 15, 2024
இந்நிலையில் பொங்கலை முன்னிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக ‘தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர்கள் விஜய், பிரஷாந்த், பிரபு தேவா, அஜ்மல் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ள அந்த போஸ்டரை வெங்கட் பிரபு தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், ‘மீட் ‘தி கோட்’ ஸ்குவாட்’ என பதிவிடுள்ளார். அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Meet #TheGOATsquad @actorvijay @actorprashanth @PDdancing #ajmal #TheGreatestOfAllTime #ThalapathyPongal #aVPhero @archanakalpathi pic.twitter.com/JXLedEcCrK
— venkat prabhu (@vp_offl) January 15, 2024