தி கிரே மேன் – பார்வையாளர்களை மயக்கத்தில் மூழ்கடிக்கும் ஒரு அதிசய உலகம் – ரூஷோ பிரதர்ஸ்

0
153

தி கிரே மேன் – பார்வையாளர்களை மயக்கத்தில் மூழ்கடிக்கும்
ஒரு அதிசய உலகம் – ரூஷோ பிரதர்ஸ்

Netflix தயாரிப்பில் ரூஷோ சகோதரர்களின் அடுத்த அதிரடி பிளாக்பஸ்டர் திரைப்படம் ‘தி கிரே மேன்’, உலகத்தின் மிகப்பெரும் நட்சத்திரங்களின் பங்களிப்பில், விரைவில் ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது. ஒரு புத்தகத்திலிருந்து திரைப்படமாக, தி கிரே மேன் படத்தை உருவாக்க, இந்தக்கதை அந்தளவு ஏன் ரூஷோ சகோதரர்களை கவர்ந்தது என்பதை அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். பொதுவாக ஆக்‌ஷன் படங்களுக்கு பெயர் பெற்ற ரூஷோ சகோதரர்கள் இது குறித்து கூறுகையில்.., “எங்கள் பிஸியான ஷெட்யூலால் இந்தப் படத்தைத் தயாரிக்க எங்களுக்கு ஒன்பது வருடங்கள் ஆனது. மார்க் க்ரேனியின் எழுத்து மற்றும் அவர் ஒவ்வொரு விசயம் குறித்து செய்யும் ஆராய்ச்சிகள் கண்டு நாங்கள் வியந்தோம். ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தும் சுவாரசியமான கதைகளை உருவாக்குவதற்கான தேடலில் தான் நாங்கள் எப்போதும் இருக்கிறோம். நாங்கள் வளர்ந்த 70களின் த்ரில்லர்களால் ஈர்க்கப்பட்ட வகையில், தி கிரே மேன் திரைப்படமும், அதே போன்று மிகவும் சிக்கலான அரசியல் மற்றும் அமைப்புக்கு எதிரான போராட்டத்தை உள்ளடக்கியதாக இருக்கும், மேலும் உலகத்தைப் பற்றிய நமது பார்வையை, அச்சங்களை இப்படத்தில் பிரதிபலித்துள்ளோம். இப்படத்தின் வித்தியாசமான வகையைக் கருத்தில் கொண்டு, பார்வையாளர்கள் தங்களை முழுதாக மறக்கும் வகையில் ஒரு உலகத்தை உருவாக்க விரும்பினோம். எங்களிடம் ஒரு நம்பமுடியாத நடிகர் பட்டாளம் இருந்தனர், இப்படத்தின் ஒவ்வொரு நடிகருக்கும் படத்தில் தனித்த சிந்தனை மற்றும் பின் கதை உள்ளது. இப்படத்தில் ஒளிப்பதிவில் புதிய அணுகுமுறையுடன், லாஸ் ஏஞ்சல்ஸ், பிரான்ஸ், செக் குடியரசு, தாய்லாந்து, குரோஷியா, ஆஸ்திரியா மற்றும் அஜர்பைஜான் உள்ளிட்ட ஏழு வெவ்வேறு நாடுகளில் தி கிரே மேன் படத்தை படமாக்கியுள்ளோம். ஜோ ரூஷோ மேலும் கூறுகையில், “தி கிரே மேன் கதையில் அதிக ஆற்றல், கடும் நிர்பந்தம் மற்றும் மிகக்குறைந்த காலக்கெடுவுடன் பரப்பரப்பாக பயணிக்கும் கதை உள்ளது , இது உங்களை இருக்கையின் நுனியில் உட்கார வைக்கும். என்றார்”

ரூஷோ பிரதர்ஸ் மற்றொரு பிளாக்பஸ்டருடன் வந்திருக்கிறார்கள். படம் வெளியாகும் நாளை குறித்து வைத்து கொள்ளுங்கள் – தி கிரே மேன் பிரத்தியேகமாக Netflix இல் ஜூலை 22 ஆம் தேதி வெளியாகிறது.