திரையரங்குகளில் படங்கள் வெளியாவது மகிழ்ச்சி – நடிகர் அதர்வா பேச்சு

0
129

திரையரங்குகளில் படங்கள் வெளியாவது மகிழ்ச்சி – நடிகர் அதர்வா பேச்சு

தெலுங்கில் வெளியாகி வெற்றியடைந்த நின்னுக்கோரி என்ற திரைப்படத்தை தள்ளிப்போகாதே என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளனர்.

இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தள்ளிப்போகாதே படத்தில் அதர்வா ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பிரேமம், கொடி போன்ற படங்களில் நடித்த அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். குடும்பம் மற்றும் உறவுகளை மையப்படுத்தி இப்படம் உருவாகி இருக்கிறது.

இப்படத்தில் அதர்வா பிஎச்.டி பட்டதாரியாகவும், அனுபமா பரதநாட்டிய டான்சராகவும் நடித்துள்ளார்கள். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடை பெற்று வந்தது. இப்படத்திற்கு சென்சாரில் யூ/ஏ சான்றிதழ் கிடைத்திருக்கிறது.

இந்தப் படத்திற்கான செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற படக்குழுவினர் தள்ளிப்போகாதே திரைப்படம் காதல், குடும்பம் ஆகியவற்றின் பின்னணியில் எடுக்கப்பட்டுள்ளதாக கூறினர். மேலும் அக்டோபர் 14-ஆம் தேதி வெளியாக உள்ள இந்த திரைப்படம் அனைவரும் பார்த்து ரசிக்கும் வகையில் இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.

விழாவில் இயக்குனர் ஆர்.கண்ணன் பேசும் போது, விண்ணைத்தாண்டி வருவாயா, 96 ஆகிய படங்களைப் போல ஆபாசம் இல்லாமல் எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

விழாவில் அதர்வா பேசும் போது,  இந்த திரைப்படம் ஒரு ஆண்டுகள் முன்பே வெளியீட்டுக்கு தயாராகி விட்டது. இதனால் திரையரங்கில் வெளியாகுமா அல்லது ஓ.டி.டியில் வெளியாகுமா என்ற குழப்பத்திலேயே அனைவரும் இருந்ததாக தெரிவித்தார். மேலும் திரையரங்கில் ஒரு படம் வெளியாவது அந்த நடிகருக்கு மகிழ்ச்சியை கொடுக்கும், அந்த வகையில் தற்போது தானும் மகிழ்ச்சியில் உள்ளதாக கூறினார்.