திருமண மண்டபத்தை வழங்குகிறேன் – வைரமுத்து அறிவிப்பு
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருவதால், அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு படுக்கைகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. புதிதாக கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்க முடியாமலும் அவதிப்பட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் பல அரசு மற்றும் தனியார் கட்டிடங்கள் கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டு வருகின்றன. திருமண மண்டபங்களை மருத்துவமனைகளாக மாற்றுவதற்கு முடிவெடுத்தால் தனது திருமண மண்டபத்தை கொடுத்து உதவிட தயார் என்று வைரமுத்து கூறியுள்ளார்.
இதுகுறித்து வைரமுத்து தனது சமூக வலைத்தள பக்கத்தில், திருமண மண்டபங்களைத் தற்காலிக மருத்துவ மனைகளாக மாற்றுவதற்குத் தமிழக அரசு முடிவெடுத்தால், முதல் மண்டபமாக எங்கள் ‘பொன்மணி மாளிகை’ திருமண மண்டபத்தை மருத்துவமனையாக மாற்ற வழங்குகிறோம். மணம் நிகழ்வதைவிட குணம் நிகழ்வதே மங்கலமல்லவா?’ என்று பதிவு செய்திருக்கிறார்.
திருமண மண்டபங்களைத்
தற்காலிக மருத்துவ மனைகளாக
மாற்றுவதற்குத்
தமிழக அரசு முடிவெடுத்தால்,முதல் மண்டபமாக
எங்கள் 'பொன்மணி மாளிகை'
திருமண மண்டபத்தை
மருத்துவமனையாக மாற்ற வழங்குகிறோம்.மணம் நிகழ்வதைவிட
குணம் நிகழ்வதே மங்கலமல்லவா?— வைரமுத்து (@Vairamuthu) May 8, 2021