திருமணமா? அந்த தவறை என் வாழ்நாளில் செய்யவே மாட்டேன்- நடிகை சார்மி பதில்!

0
180

திருமணமா? அந்த தவறை என் வாழ்நாளில் செய்யவே மாட்டேன்- நடிகை சார்மி பதில்!

காதல் அழிவதில்லை திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் சார்மி. அதன்பிறகு, தெலுங்கு சினிமாவிலும் அறிமுகமாகி பல திரைப்படங்களில் நடித்தவர், தற்போது திரைப்பட தயாரிப்பில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில், சார்மி திருமணம் செய்துகொண்டதாக தகவல்கள் பரவிய நிலையில், தன் வாழ்க்கையின் மிக முக்கியமான கட்டத்தில் தற்போது இருப்பதாகவும், அதனால் திருமணம் எனும் தவறை வாழ்க்கையில் செய்யவே மாட்டேன் என திருமண வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் சார்மி.

முன்னதாக இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தோடு காதலில் இருந்ததாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.