தாமதமாகும் ஷூட்டிங்… ‘இந்தியன் 2’ படத்தில் இருந்து முக்கிய பிரபலம் விலகல்?

0
172

தாமதமாகும் ஷூட்டிங்… ‘இந்தியன் 2’ படத்தில் இருந்து முக்கிய பிரபலம் விலகல்?

கடந்த 1996-ஆம் ஆண்டு வெளியாகி, மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் இந்தியன். இந்த படம் வெளியாகி 25 வருடங்களுக்கு பிறகு, அதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.

கமல்ஹாசன், பாபி சிம்ஹா, சித்தார்த், காஜல் அகர்வால், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிக்க இருந்த திரைப்படத்தை இயக்குநர் சங்கர் இயக்கவுள்ளார்.

படப்பிடிப்பு தொடங்கி சில நாட்கள் மட்டுமே நடைபெற்ற நிலையில், கிரேன் விழுந்து விபத்து, பெருந்தொற்று லாக்டவுன் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் காரணமாக, படப்பிடிப்பு நிறுத்தியே வைக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்த ரத்னவேலு, படப்பிடிப்பு தொடங்குவதற்கு தாமதமாகி வருவதால், அப்படத்தில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், இதுதொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. இதற்கு முன்னதாகவே, இயக்குநர் சங்கரும், ஒளிப்பதிவாளர் ரத்னவேலுவும், எந்திரன் படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.