‘தளபதி 68’ படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது!
லியோ திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய், அடுத்ததாக இயக்குநர் வெங்கட் பிரபுவுடன் இணைந்துள்ளார். ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இதில் சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, பிரசாந்த், மோகன், அஜ்மல், வைபவ், பிரேம்ஜி அமரன், இவானா உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.
இதன் படப்பிடிப்பு தாய்லாந்து, துருக்கி, ஹைதராபாத் பகுதிகளில் நடைபெற்றது. இந்நிலையில் விஜய்யின் 68 ஆவது படம் குறித்த பெயர், பாஸ் என்றும், puzzle எனவும் இணையத்தில் பேசப்பட்டது. ஆனால் இந்த இரண்டு பெயர்களுமே இல்லை என்று தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி கூறியிருந்தார்.
ரசிகர்களுக்கு கடந்த சில தினங்களுக்கு முன் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்திருந்த இயக்குநர் வெங்கட்பிரபு, விரைவில் தளபதி 68 குறித்தான அப்டேட்கள் வெளியாகும் என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் ‘தளபதி 68’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டிலை படக்குழு வெளியிட்டுள்ளது.
அதன்படி இந்த படத்துக்கு ‘தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’ (The Greatest Of All Time) என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் இடம்பெற்றுள்ளார். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இடதுபுறம் இருக்கும் விஜய் விண்வெளிக்கு செல்லும் முன்பும், வலதுபுறம் இருக்கும் விஜய் விண்வெளியில் இருந்து வந்த பின்னும் இருப்பதுபோன்றே புகைப்படம் உள்ளது. மட்டுமல்லாது பின்னால் பாராசூட் கிடக்கிறது.
Our Thalapathy is the
Greatest Of All Time 🔥🔥🔥🔥#GreatestOfAllTime #Thalapathy68FirstLook#AGS25 #Thalapathy68 @actorvijay Sir@ags_production #KalpathiSAghoram #KalpathiSGanesh #KalpathiSSuresh @vp_offl @archanakalpathi @aishkalpathi @thisisysr @actorprashanth… pic.twitter.com/SOgQSGHXEF
— Archana Kalpathi (@archanakalpathi) December 31, 2023
— Vijay (@actorvijay) December 31, 2023