‘தல உனக்கு மட்டும் தான் இப்படி கூட்டம் வருது’ – வலிமை குறித்து குஷ்பு

0
101

‘தல உனக்கு மட்டும் தான் இப்படி கூட்டம் வருது’ – வலிமை குறித்து குஷ்பு

நீண்ட இடைவெளிக்குப் பின் நடிகர் அஜித் நடிப்பில், திரையரங்குகளில் வெளியாகியுள்ள ‘வலிமை’ திரைப்படத்தின் நீளம் குறைக்கப்பட்டுள்ளது.

‘நேர்கொண்ட பார்வை’ படத்திற்குப் பிறகு, ஹெச் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் 2-வது முறையாக நடித்துள்ள படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரித்துள்ள இந்தப் படம், நீண்ட நாள் காத்திருப்புக்குப் பின், உலகம் முழுவதும் நேற்று முன்தினம் வெளியானது. இதையடுத்து, திருவிழா போல் ரசிகர்கள் அஜித் கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்து, பட்டாசு வெடித்து நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்து வருகின்றனர்.

மேலும், இந்தப் படத்தில் பைக் சேஸிங், சண்டைக் காட்சிகள் மிகவும் அற்புதமாக எடுக்கப்பட்டிருப்பாக ரசிகர்கள் கூறிவருகின்றனர். இதுவரை வெளியான அஜித் படங்களில் இதுவே அதிக வசூல் செய்தப் படமாகவும் கூறப்படுகிறது. மேலும் ‘அண்ணாத்த’ (ரூ.35 கோடி) மற்றும் ‘மாஸ்டர்’ (ரூ. 34.80 கோடி) ஆகிய படங்களின் வசூல் சாதனையையும் ‘வலிமை’ முறியடித்துள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தை பார்த்த திரையுலகினர் பலர் அவர்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் வலிமை படத்தை பார்த்த நடிகை குஷ்பூ படத்தையும் அஜித்தையும் பாராட்டியுள்ளார். இதனை அவருடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், “தல உனக்கு மட்டும்தான் இப்படி கூட்டம் வருது” எனக் குறிப்பிட்டுள்ளார்.