தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணியின் தேர்தல் அறிக்கை – கலைப்புலி எஸ்.தாணு வெளியிட்டார்
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2023-2026ம் ஆண்டுக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 30 ஆம் தேதி நடைபெற உள்ளது. தற்போதைய தலைவர் என்.இராமசாமி தலைமையிலான அணி மீண்டும் போட்டியிருகிறது.
என்.இராமசாமி தலைவர் பதவிக்கு போட்டியிட, ஜி.எம்.தமிழ்குமரன் மற்றும் அர்ச்சனா கல்பாத்தி துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்கள். செயாளர் பதவிக்கு ஆர்.ராதாகிருஷ்ணன், எஸ்.கதிரேசன் போட்டியிடுகிறார்கள். பொருளாளர் பதவிக்கு சந்திரபிரகாஷும், இணை செயலாளர் பதவிக்கு எஸ்.செளந்தர பாண்டியனும் போட்டியிடுகிறார்கள்.
அழகன் தமிழ்மணி, ஆர்.மாதேஷ், சித்ரா லட்சுமணன், மனோஜ் குமார், எச்.முரளி, எம்.கபார், என்.விஜயமுரளி, என்.சுபாஸ் சந்திரபோஸ், வி.பழனிவேல், ஏ.எல்.உதயா, ஷக்தி சிதபரம், எம்.திருமலை, அம்பேத் குமார், ஜே.சுரேஷ், சாலை சகாதேவன், எஸ்.ராமசந்திரன், டில்லி பாபு, தாய் சரவணன், என்.பன்னீர் செல்வம், எஸ்.ஆர்.செல்வராஜ், வி.என்.ரஞ்சித் குமார், ஜெயசீலன், ஜே.செந்தில் குமார், செந்தாமரை கண்ணன், அன்புதுரை என்கிற மிட்டாய் அன்பு, எஸ்.ஜோதி ஆகியோர் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகிறார்கள்.
இந்த நிலிஅயில், தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணியின் தேர்தல் அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு தேர்தல் அறிக்கையை வெளியிட, எஸ்.வி.சேகர், கே.ராஜன், வி.சி.குகநாதன் ஆகியோர் பெற்றுக் கொண்டார்கள்.