நடிகை சாக்ஷி அகர்வாலை, ஹாலிவுட்டில் அறிமுகப்படுத்தும் N.T.நந்தா

0
179
நடிகை சாக்ஷி அகர்வாலை, ஹாலிவுட்டில் அறிமுகப்படுத்தும் N.T.நந்தா

பலரின் பாராட்டை பெற்ற ‘வல்லதேசம்’ படத்தை இயக்கியவர் இயக்குனர் N.T.நந்தா. தற்போது இயக்குநர் திரு.நந்தா அவர்கள் இயக்கிய 120 hours என்ற இந்த ஹாலிவுட் படத்தின் டிரெய்லரை இயக்குநர் இமயம் பாரதிராஜா வெளியிட்டு, நந்தாவிற்கு ஆசி வழங்கியுள்ளார்.

உலக சினிமாக்களைப் பார்த்து வியக்கும் தமிழர்கள், உலக சினிமாக்களையே இப்போது இயக்கிக்கொண்டிருக்கிறார்கள். இயக்குனர் N.T.நந்தா ஹாலிவுட்டில் வெற்றி இயக்குநராக வலம் வரவேண்டுமென்று இயக்குனர் பாரதிராஜா வாழ்த்தியுள்ளார்.

N.T.நந்தா  இயக்கிய “120 hours” என்ற  ஹாலிவுட் படத்தின் டிரெய்லரை இயக்குநர் இமயம் பார்த்து, வியந்ததோடு, டிரெய்லரில் மிரட்டியிருக்கிறாய் என்று புகழ்ந்து நந்தாவிற்கும், படத்தில் அறிமுகமாயிருக்கும், BIG BOSS புகழ் சாக்ஷி அகர்வால், பிரணய் காளியப்பனுக்கும் ஆசி வழங்கியுள்ளார்.

“தமிழர்களின் இதயத்துடிப்பெல்லாம் இப்போது, பிக்பாஸில் தான் இருக்கிறது. பிக் பாஸ் வீட்டிற்குள் இருப்பவர்களையெல்லாம், தங்கள் வீட்டிற்குள் இருப்பவர்களாகவே அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் தமிழர்கள்

அந்த வகையில் சாக்ஷி அகர்வால் தமிழர்கள் மட்டுமல்ல, உலகத் தமிழர்கள் மத்தியில் பிரபலம்.பாலிவுட்டில் இருப்பவர்கள் மட்டும்தான், ஹாலிவுட்டை கலக்க முடியும் என்ற விதியை மாற்றி,சாக்ஷி அகர்வாலின் நடிப்பின் அசாத்தியமான திறமையைப்  பார்த்த நந்தா அவரை ஹாலிவுட்டில் அறிமுகம் செய்திருக்கிறார்.

சாக்ஷி அகர்வாலின் இந்த அறிமுகம், அவரை சினிமாவின் அடுத்த தளத்திற்கு கொண்டு போகுமென அவர் நம்புகிறார்.