தமிழ் திரையுலகில் அடுத்த அதிர்ச்சி! பிரபல நடிகர் நெல்லை சிவா, துணை நடிகர் மாறன் உயிரிழப்பு…!! அதிர்ச்சியில் திரையுலகம்..!!!

0
301

தமிழ் திரையுலகில் அடுத்த அதிர்ச்சி! பிரபல நடிகர் நெல்லை சிவா – துணை நடிகர் மாறன் உயிரிழப்பு…!! அதிர்ச்சியில் திரையுலகம்..!!!

தமிழ் சினிமாவில் பல படங்களில் நகைச்சுவை வேடங்களிலும் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்தவர் நெல்லை சிவா. இவர் வடிவேலுடன் இணைந்து பல படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் நெல்லை சிவா மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இவருக்கு வயது 60. இன்று மாலை 6 மணி அளவில் அவரது சொந்த ஊரான நெல்லை மாவட்டம் பணகுடியில் மரணமடைந்துள்ளார். இவரது மறைவிற்கு பிரபலங்கள் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். இவரது இறுதி சடங்கு நாளை நண்பகல் நடக்க இருக்கிறது.

இந்நிலையில், செங்கல்பட்டு நத்தம் பகுதியில் வசித்து வந்தவர் திரைப்பட துணை நடிகர் மாறன் . இவருக்கு கடந்த சில நாடகளுக்கு முன் கொரோனா தொற்று உறுதிசெய்யபட்டது. இதையடுத்து அவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் மாறன் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார். அவருக்கு வயது 48.

2004ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான கில்லி திரைப்படத்தில் நடித்தவர் துணை நடிகர் மாறன். ஆதிவாசி என்ற கேரக்டரில் அந்த படத்தில் நடித்த டிஷ்யூம், பட்டாசு, தலைநகரம், வேட்டைக்காரன், கேஜிஎஃப் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் . வில்லன் மற்றும் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர், கானா பாடல்களையும் மேடை கச்சேரிகளில் பாடி வந்துள்ளார்.

கொரோனா தொற்றால் திரையுலகினர் அடுத்தடுத்து மரணம் அடைவது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.