தமிழகம் மற்றும் ஹிந்தி திரையுலகத்தில் சாதனைப் படைத்த கே.ஜி.எஃப்-2 முதல் வாரத்தின் வசூல் எவ்வளவு?
தமிழகத்தில் ‘கேஜிஎஃப் – அத்தியாயம் 2’ திரைப்படம் முதல் வார முடிவில் 44 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. ஹிந்தி பெல்ட்டில் 7 நாட்களில் 254.97 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
யஷ் நடிப்பில் பிரசாத் நீல் இயக்கத்தில் உருவான ‘கேஜிஎஃப் – அத்தியாயம் 2’ திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது. தமிழகத்திலும் அந்த திரைப்படத்திற்கு அமோக வரவேற்பு இருந்தது. இந்த நிலையில் கடந்த 14ஆம் தேதி தமிழகத்தில் சுமார் 350 திரையரங்குகளில் ‘கேஜிஎஃப்: அத்தியாயம் 2’ வெளியானது. இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களின் வருகை அதிகமாக இருந்ததால் திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது, மற்றும் வழக்கமான கட்சிகளை விட கூடுதல் காட்சிகள் திரையிடப்பட்டன. இதனால் முதல் நான்கு நாட்களில் 30 கோடி வசூல் செய்தது.
இதைத்தொடர்ந்து தற்போது ஏழு நாட்களை உள்ளடக்கிய முதல் வார முடிவில் 44 கோடி ரூபாயை கே.ஜி.எஃப்-2 திரைப்படம் வசூல் செய்துள்ளது. இதன் மூலம் கன்னட திரைப்படம் தமிழகத்தில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையை கே.ஜி.எஃப்-2 நிகழ்த்தியிருக்கிறது. அதேபோல் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் ஏழு நாட்களில் 93 கோடி ரூபாய் வசூல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தை தொடர்ந்து, ‘கேஜிஎஃப்: அத்தியாயம் 2’ ஹிந்தி திரையுலகினரைத் தொடர்ந்து கவர்ந்து வருகிறது. பிராந்திய மொழிப் படமாக இருப்பதால், ஹிந்தி மார்க்கெட்டில் இந்தப் படம் சிறப்பான வசூல் செய்து வருகிறது.
143.64 கோடியுடன் அதிகபட்சமாக 3வது நாள் வசூலை பதிவு செய்த இப்படம் முதல் வாரத்தில் ரூ.250 கோடி என்ற மேஜிக் ஃபிகரைத் தாண்டியுள்ளது.
ஹிந்தி பெல்ட்டில் 7 நாட்களில் 254.97 கோடி நிகர (ரூ. 300.86 கோடி மொத்த) வசூல் செய்து, இப்படம் அதிக 1-வது வார வசூல் மற்றும் இந்தி பாக்ஸ் ஆபிஸில் ரூ. 250 கோடியைத் தாண்டிய முதல் திரைப்படமாக உருவெடுத்துள்ளது.