தங்கம் பா.சரவணன் இயக்கத்தில் சசிகுமார்…!

0
103

தங்கம் பா.சரவணன் இயக்கத்தில் சசிகுமார்…!

சசிகுமார் நடிப்பில் இந்த வருடம் பொங்கல் தினத்தில் கொம்பு வச்ச சிங்கம்டா திரைப்படம் வெளியானது. இப்படத்தை தொடர்ந்து தற்போது காமன் மேன் என்னும் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், அடுத்ததாக தங்கம் பா.சரவணன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் சசிகுமார் நடிக்க இருக்கிறார்.

எஸ்.கே.எல்.எஸ் கேலக்ஸி மால் புரடொக்‌ஷன்ஸ் ஈ.மோகன் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் பூஜை சமீபத்தில் போடப்பட்டது. இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க முன்னணி நடிகைகளிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. அனன்யா நாகல்லா, கருணாஸ், ராஜ் மோகன், அபிராமி ராகுல் பவணன், ஜி.எம்.சுந்தர், ஜோ மல்லூரி, தயானந்த் ரெட்டி மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் இணைந்து நடிக்கவுள்ளனர்.