டிரைவர் ஜமுனா படத்திற்கு பிரமோட் செய்யும் ப்ளு சட்டை டாக்டர் – சமூகவலை தளத்தில் வைரலாகும் புகைப்படம்
தெலுங்கு திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததன் மூலம் சினி உலகில் அடியெடுத்து வைத்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். பின்னர், கலைஞர் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த டான்ஸ் ரியாலிட்டி ஷோ மானாட மயிலாட நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.
இதனைத் தொடர்ந்து, சன் டிவியில் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து வந்த இவர், நீதானா அவன் என்னும் தமிழ் திரைப்படத்தில் நடித்தார். இப்படம் பெரிய வரவேற்பு பெறாத நிலையில், விஜய் சேதுபதியுடன் இவர் நடித்த ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் திரைப்படங்கள் மூலம் நல்ல வரவேற்பை பெற்றார்.
கோலிவுட் வட்டாரத்தில் தனக்கென இடத்தை பிடித்த ஐஸ்வர்யா ராஜேஷ், அவர்களும் இவர்களும், உயர்திரு 420, சட்டப்படி குற்றம், அட்டகத்தி, புத்தகம், கதை திரைக்கதை வசனம் இயக்கம், திருடன் போலீஸ் போன்ற பல திரைப்படங்களில் நடித்தார். இவருக்கு பெரிய மைல்கல் ஆக அமைந்த திரைப்படங்கள் கனா மற்றும் காக்க முட்டை.
தனக்கான டிழடன கதாபாத்திரங்கள் கொண்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்றார். இவர் தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வத்திக்குச்சி இயக்குநர் கின்ஸ்லி இயக்கத்தில் கதையின் நாயகியாக நடித்திருக்கும் படம் ‘டிரைவர் ஜமுனா”. இவருடன் ‘ஆடுகளம்’, நரேன், ஸ்ரீரஞ்சனி, ‘ஸ்டான்ட் அப் காமடியன்” அபிஷேக், ‘ராஜாராணி’ பட புகழ் பாண்டியன், கவிதா பாரதி, பாண்டி, மணிகண்டன் ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். டான் பாலா கலை இயக்கத்தை கவனிக்க, படத்தொகுப்பை ஆர்.ராமர் மேற்கொண்டிருக்கிறார். சாலை பயணத்தை மையப்படுத்திய இந்த திரைப்படத்திற்கு ஒலியின் பங்களிப்பு இன்றியமையாதது என்பதால், படத்தின் ஒலி வடிவமைப்பை, முன்னணி ஒலி வடிவமைப்பு நிறுவனமான ஸிங்க் சினிமா ஏற்றுக்கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்தை பிரம்மாண்டமான பொருட்செலவில் 18 ரீல்ஸ் சார்பில், பிரபல குழந்தைகள் நல மருத்துவரும், முன்னணி திரைப்பட தயாரிப்பாளருமான எஸ்.பி.சௌத்ரி தயாரித்திருக்கிறார்.
படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக்கை படக்குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் ‘டிரைவர் ஜமுனா” படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், டிரைவர் ஜமுனா படத்திற்கு விழுப்புரத்தில் ‘ப்ளு சட்டை” டாக்டர் ஜெயானந்தன் வித்தியாசமான முறையில் பிரமோட் செய்வதாக சுவரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது சமூகவலை தளத்தில் பிரபலமான ப்ளு சட்டை மாறன் இருப்பது போல், அவரை மாதிரியே கிட்டத்தட்ட அதே உருவத்தில் இருக்க கூடிய டாக்டர் ஜெயானந்தன். இந்த டாக்டர் யார் என்றால் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் ரொம்ப பிரபலமான மருத்துவராக பணிபுரிகிறார். விழுப்புரத்தில் இவருடைய பெயரை சொன்னால் நிறைய பேருக்கு தெரியும் அளவிற்கு பிரபலமானவர்.
பிரபல குழந்தைகள் நல மருத்துவரும், முன்னணி திரைப்பட தயாரிப்பாளருமான எஸ்.பி.சௌத்ரி இவரும் நண்பர்கள். டாக்டர் சமூகத்தில் இவர்களுக்கு பெரிய நட்புறவு இருக்கிறது.
இவர் டிரைவர் ஜமுனா தயாரிப்பாளர் மற்றும் ரசிகர்களை சந்தோஷப்படுத்த ப்ளு சட்டை மாறன் போல ப்ளு சட்டை உடை அணிந்து டிரைவர் ஜமுனா படத்தின் போஸ்டர்ஸ் ஒட்டப்பட்ட இடத்தில் போய் நின்று போட்டோ எடுத்து சமூகவலை தளத்தில் ஷேர் செய்வதுடன், டாக்டர் சமூகத்தில் அந்த போட்டோஸ் பற்றி ரொம்ப ஜாலியா பேசிகிட்டு வித்தியாசமான முறையில் டிரைவர் ஜமுனா படத்திற்காக பிரமோட் செய்கிறார் ப்ளு சட்டை விழுப்புரம் டாக்டர் ஜெயானந்தன்.
சமூகவலை தளத்தில் ரசிகர்களிடையே இந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.