டிசம்பர் 2-ல் வெளியாகும் மோகன்லாலின் ‘மரைக்காயர் அரபிக்கடலிண்டே சிம்ஹம்’
மலையாளத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள மோகன்லாலின் ‘மரைக்காயர் அரபிக்கடலிண்டே சிம்ஹம்’ படத்தை முன்னணி இயக்குநர் ப்ரியதர்ஷன் இயக்கியுள்ளார். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், பிரபு, அர்ஜுன், மஞ்சு வாரியர், அசோக் செல்வன்,சுஹாசினி உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகிறது. இந்திய கடற்படை எல்லையில் முதன்முறையாக கடற்படை பாதுகாப்பை உருவாக்கியவராக அறியப்படும் குன்ஹாலி மரைக்காயரின் வாழ்க்கை வரலாற்றுப் படமான இப்படம் கொரோனா சூழலால் வெளியாகவில்லை. கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி உலகம் முழுக்க தியேட்டர்களில் வெளியாகிறது என்று மோகன்லால் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார்.
ஆனால், கேரளாவில் அக்டோபர் 25 ஆம் தேதி முதல்தான் தியேட்டர்கள் 50 சதவீத பார்வையாளர்களுடன் அனுமதிக்கப்பட்டன. இந்த நிலையில், வரும் டிசம்பர் 2 ஆம் தேதி உலகம் முழுக்க தியேட்டர்களில் ‘மரைக்காயர்’ வெளியாகிறது என்று அம்மாநில கலாச்சாரத்துறை அமைச்சர் ஷாஜி செரியன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தற்போது தெரிவித்துள்ளார். சமீபத்தில், இப்படத்தை தியேட்டர் உரிமையாளர்கள் அதிக விலைக்கு வாங்காததால் ஓடிடியில் வெளியாகிறது என்று தகவல்கள் வெளியான நிலையில், கேரள கலாச்சாரத்துறை அமைச்சர் ஷாஜி செரியன் தியேட்டரில் வெளியாகிறது என்று தெரிவித்துள்ளார். அதேசமயம், படம் தியேட்டர் – அமேசான் பிரைம் ஓடிடி என்று ஒரே நேரத்தில் வெளியாகிறது என்றும் சொல்லப்படுகிறது. ‘மரைக்காயர்’ தமிழிலும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
The much-awaited 'Marakkar – Arabikadalinte Simham' to be released in Theatres worldwide on the 2nd of December, 2021!@priyadarshandir @antonypbvr @aashirvadcine @impranavlal @SunielVShetty @sabucyril @DOP_Tirru @akarjunofficial
@ManjuWarrier @kalyanipriyan @KeerthyOfficial— Mohanlal (@Mohanlal) November 11, 2021